கதவடைப்பபை குழப்ப ஒட்டுக்குழுக்கள் சதி?

232

நாளைய கதவடைப்பிற்கு பெருகிவரும் ஆதரவின் மத்தியில் அதனை குழப்பியடிக்க பல முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் என்பவர் யாழ்ப்பாண வர்த்தகர்களை, பொலிசாரை அவரவர் கடைகளுக்கு அனுப்பி பலவந்தமாக வரச்சொல்லி அழைத்திருந்தார்.

இது சம்பந்தமாக மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி உரையாடலின்போது இறுதியாக தனது நிலைப்பாட்டை மாற்றி வரவேண்டாம் எனக் கூறியதாக வர்த்தகர் தம்பிராஜா என்பவர் ஒலிப்பதிவு ஆதரத்துடன் அம்பலப்படுத்தியுள்ளார்.

இதனிடையே நாளையதினம் வடகிழக்கு முழுவதும் கதவடைப்பு போராட்டத்தை முன்னெடுக்குமாறு தமிழ்த் தேசியக் கட்சிகளால் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கைக்கு புலனாய்வு பிரிவின் ஏற்பாட்டில் சிறியகுழு ஒன்றினால் ஆர்ப்பாட்ட போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பேரூந்து நிலையத்துக்கு முன்பாக குறித்த போராட்டம் இடம்பெற்றிருந்தது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேரணியாக யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலயம் வரை சென்று பிரதி பொலிஸ்மா அதிபருக்கும் ஒரு மகஜரினை கையளித்துள்ளனர்.

போராட்டத்தை தலைமை தாங்கிய நபர் கடந்த பொதுதேர்தலில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் வேட்பாளராக, அங்கஜன் இராமநாதன் தலைமையில் போட்டியிட்டிருந்த அருண் என அடையாளம் காணப்பட்டுள்ளாhர். அத்துடன், சில காலம் முன்னர் தென்னிலங்கை ஊடகங்களில் தோன்றி, தன்னை ஆவா குழு ரௌடியென கூறி, பிரபலம் தேட முயன்ற அவர் தற்போது ஊடகவியலாளர் என அடையாளப்படுத்தி திரிவது தெரிந்ததே.