செல்வச்சந்நிதி உண்ணாநிலைப் போராட்டம் – தடை விதித்தது நீதிமன்று!

71

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட செல்வச்சந்நிதி முன்றலில் நடைபெற ஏற்பாடாகியிருந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பருதித்துறை நீதிமன்று சற்றுமுன்னர் தடை விதித்துள்ளது.

வல்வெட்டித்துறை பொலிஸார் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போதே குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த ஆலயத்தில் போராட்டம்மேற்கொள்ள மட்டுமே நீதிமன்றம் தடைவிதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.