தியாகி திலீபனின் நினைவாலயத்தின் முன் முன்னணியினருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த ஆதரவாளர்கள்

138

இலங்கை பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி யாழ் மாவட்டத்தில் வெற்றி பெற்றதனை முன்னிட்டு இன்று காலை 11 மணியளவில் அஞ்சலி நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.

நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாகி திலீபனின் தூபியில் இடம்பெற்ற நிகழ்வில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் கட்சி ஆதரவாளர்கள் மலர்கொத்து வழங்கி தங்களுடைய வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.

மேலும் வேட்பாளர்களாக போட்டியிட்ட கனகரட்ணம் சுகாஷ், திருமதி வாசுகி சுதாகர், சட்டத்தரணி காண்டீபன், டிலானபத்மநாதன் ஆகியோருடன் கட்சி ஆதரவாளர்களும் செயற்பாட்டாளர்களும் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.