உண்ணாவிரத போராட்ட களத்தில் யாழ் பல்கலை மாணவர்கள்! – முரண்டுபிடித்த பாெலிஸார்!

80

தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் நினைவேந்தல் தடைக்கு எதிராகவும், தமிழ் மக்களுக்கு எதிரான அரச அடக்குமுறைகளை அரசு நிறுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்தி ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகளால் சாவகச்சேரி சிவன் ஆலயத்தின் இன்று (26) காலை ஆரம்பிக்கப்பட்ட ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்து வருகின்றது.

இந்நிலையில் போராட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து கொண்டுள்ளனர்.

போராட்ட இடத்தில் கண்காணிப்புக் கடமையிலிருக்கும் பொலிஸார், மாணவர்களை போராட்ட இடத்துக்கு அனுமதியளிக்க மறுத்தனர். எனினும் மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா பொலிஸாருக்கு விடயத்தை எடுத்துக் கூறியதன் அடிப்படையில் பின்னர் அனுமதித்தனர்.

SHARE