நினைவேந்தலை வலியுறுத்தி முன்னணியும் கையெழுத்திட்டது !

70

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் உட்பட விடுதலைப் போரில் உயிர்நீர்த்தவர்களை நினைவு கூறுவதற்கான தடைகளை விலக்கக்கோரி ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அனுப்பவுள்ள கடிதத்தில் தமிழ் தேசியத்தின் பால் நிற்கின்ற அனைத்து தமிழ் கட்சிகளும் கையொப்பமிட்டனர்.

தியாகி திலீபன் உட்பட விடுதலைப் போரில் உயிர்நீத்தவர்களை நினைவுகூறுவதற்கான தடையை இலங்கை அரசாங்கம் விலக்க வேண்டும் என நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற அனைத்துக்கட்சிக் கூட்டதில் தீர்மானிக்கப்பட்டது.

அத் தீர்மானத்தினத்தினை ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் கடிதமுலம் அனுப்பப்படுவதற்காக இன்று மீளவும் தமிழ் கட்சிகள் வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ வீ கே சிவஞானம் அலுவலகத்தில் ஒன்றுகூடினர்.

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அனுப்பவுள்ள கடிதத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி,
தமிழ் தேசியக் கூட்டமைப்பு, (இலங்கை தமிழ் அரசு கட்சி, புளொட்,) , ஈபிஆர்எல்எப், தமிழ் தேசிய கட்சி, ஈழ தமிழர் சுயாட்சி கழகம் தமிழ்தேசிய பசுமை இயக்கம் ஆகிய கட்சிகள் கையெழுத்திட்டுள்ளன.