மணிவண்ணனின் பொறுப்புக்கள் மீளப் பெற்றுக் கொள்ளப்படுவதாக அறிவித்தார் கஜேந்திரகுமார்!

235

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் விஸ்வலிங்கம் மணிவண்ணனிடம் தற்காலிகமாக இருந்த அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் பொறுப்புக்கள் மீளப் பெற்றுக் கொள்ளப்படுவதாக வி. மணிவண்ணனுக்கு கட்சி தலைமை உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது.

இன்று காலை சனிக்கிழமை(15.08.2020) கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களிடமிருந்து உத்தியோகபூர்வமாக மணிவண்ணனுக்கு மின்அஞ்சல் மூலம் இச்செய்தியினை அனுப்பி வைத்துள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் சம்பவங்கள் தொடர்பாக கட்சியின் மத்திய குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் நீங்கள் தற்காலிகமாக வகித்து வந்த பொறுப்புக்கள் மீளப் பெற்றுக் கொள்ளப்படுவதாக அந்த தகவலில் தெறிவிக்கப்பட்டுள்ளது.