யாழ்.பல்கலைக்கழகச் சூழலில் பதற்றம் – பொலிஸ், இராணுவம் குவிப்பு!

70

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தினை அண்மித்த பகுதிகளில் வாகனங்களில் வந்த பொலிஸாரும் படையினரும் பெருமளவில் சுற்றுக்காவல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல்கலைக்கழக வாயிலில் நின்ற மாணவர்களை உள்ளே செல்லுமாறு அல்லது கலைந்து செல்லுமாறு படையினர் வலியுறுத்தியதாகவும் அதற்கு மாணவர்கள் உடன்பட மறுத்த நிலையிலேயே படையினரும் பொலிஸாரும் அங்கு வரவளைக்கப்பட்டு அந்தப் பகுதியில் சுற்றுக்காவல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தியாகதீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுப்பதற்கு யாழ்ப்பாணம் மற்றும் பருதித்துறை நீதிமன்றங்கள் தடைவிதித்துள்ள நிலையில் நாளை நினைவேந்தல் நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.