முள்ளிவாய்க்காலில் உறுதிப்பிரமாணம் எடுத்துக்கொண்டனர் முன்னணியின் உறுப்பினர்கள்!

147

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களது உறுதிப்பிரமாணம் முள்ளிவாய்க்காலில் இன்று சனிக்கிழமை (15. 08.2020) காலை 9 மணியளவில் இடம்பெற்றது.

இதன்

போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் தேசியப் பட்டியல் உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோரே முள்ளிவாய்க்காலில் உறுதிப்பிரமாணம் எடுத்துள்ளனர்.

இந்நிகழ்வில், முன்னணியின் முக்கிய உறுப்பினர்கள் மற்றும் நூற்றுக் கணக்கான முன்னணியின் ஆதரவாளர்கள் மேலும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.