மனித உரிமை செயற்பாட்டாளர் உதயசிவம் விடுதலையை வலியுறுத்தி முன்னணியினர் ஆர்ப்பாட்டம் !

146

29.08.2020 இன்று பி.ப 3.00 மணிக்கு யாழ்ப்பாணம் பேருந்து நிலையம் முன்பாக மனித உரிமை செயற்பாட்டாளர் உதயசிவம் அவர்களது விடுதலையை வலியுறுத்தியும் அனைத்து அரசியல் கைதிகளையும் உடனே விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம்

நடைபெற்றது .

குறித்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் சட்டத்தரணி சுகாஷ் மற்றும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பெரும்பாலானோர் கலந்துகொண்டு தமது கண்டனக் குரல்களை எழுப்பியிருந்தார்கள்.