தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைவு முயற்சி? – தமிழ் தேசிய கட்சிகள் சந்திப்பு!

175

தமிழ்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்டுள்ள இரண்டாம் கட்டச் சந்திப்பில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பிரதிநிதிகளும் பங்குகொண்டுள்ளனர்.கடந்தவாரம் யாழ்ப்பாணம் இளங்கலைஞர் மண்டபத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைப்பதற்கான கூட்டம் ஒன்று நடைபெற்றிருந்தது. அதன் தொடராக இன்று அடுத்த கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் இன்று இளங்கலைஞர் மண்டபத்தில் தற்போது நடைபெறுகின்ற கூட்டத்தில்தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகளாக தமிழரசுக்கட்சி சார்பில் மாவை சேனாதிராசா, சி.வி.கே.சிவஞானம், சிவஞானம் சிறீதரன், ஈ.சரவணபவன், ப.சத்தியலிங்கம், புளொட் சார்பில் சுரேன் சுரேந்திரன், புளொட் சார்பில் கஜதீபன் ஆகியோரம் பங்குகொண்டுள்ள குறித்த சந்திப்பில் தமிழ்த் மக்கள் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளான தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் க.அருந்தவபாலன், ஈபிஆர்எல்எவ் சார்பில் சுரேஷ் பிறேமச்சந்திரன், தமிழ்த் தேசியக் கட்சி சார்பில் சிவாஜிலிங்கம், சிறீகாந்தா, ஈழமக்கள் சுயாட்சிக் கழகம் சார்பில் அனந்தி சசிதரன் மற்றும் சுயேட்சையாகச் செயற்படும் பொ.ஐங்கரநேசன் ஆகியோரும் பங்குகொண்டுள்ளனர்.