சயந்தன் அணியினரால் சிதைக்கப்பட்டது மாமனிதர் ரவிராஜின் நினைவு வளாகம்!

216

யாழ்.சாவகச்சேரி பிரதேச செயலக முன்றலில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜின் சிலை வளாகத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த பூச்சாடிகள் சேதமாக்கப்பட்டுள்ளன.

அத்துடன், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் விருப்பு வாக்கு குழப்பம் காரணமாக சசிகலா ரவிராஜின் ஆதரவாளர்களால் ரவிராஜின் சிலைக்கு கறுப்பு,சிவப்பு துணிகள் மூடப்பட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த துணிகளும் அகற்றப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை(09.08.2020) மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்