பிரபாகரனின் மண்ணை வென்றுவிட்டோம் “அங்கஜன் அணி” இறுமாப்பு !

1199

நாடாளுமன்றத் தேர்தலின் யாழ். விருப்பு வாக்கு எண்ணலின்போது ஏற்பட்ட குழப்பங்களுக்கு மத்தியில், யாழ் மாவட்ட ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரும் உள் நுழைந்திருந்தமை வெளிப்பட்டுள்ளது.

இதன்படி, சுமந்திரனுக்கு எதிராகக் கோஷம் எழுப்பியவர்களில் யாழ் மாவட்ட ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கஜன் அணியின் ஆதரவாளர்களும் உள்ளடங்கியிருந்தனர்.

இந்நிலையில், ஒரு கட்டத்தில் சிவாஜிலிங்கம்துடன் கருத்து முரண்பாடுகளில் ஈடுபட்ட தரப்பினர், “பிரபாகரனின் மண்ணை வென்றுவிட்டோம், பிரபாகரனின் மண்ணை வென்றுவிட்டோம் ஏலுமா?” என ஆவேசமாகக் கூக்குரல் இட்டனர்.

இதையடுத்து முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளருமான சிவாஜிலிங்கம் அவர்கள் , “கொலை காரக் கை வென்றிருக்கிறது, பிரதமரின் கை இரத்தம் தோய்ந்த கை ‘ எனக் கோஷமிட்டவாறு சென்றார்.