பிரதேச செயலளர்களை மிரட்டும் – என் கனவு “பாழ்” அங்கயன்

918

எந்தவொரு அபிவிருத்தி திட்டங்களையும் தனது அனுமதியின்றி நடைமுறைப்படுத்தக் கூடாது என்று யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர் அங்கஜன் இராமநாதன், யாழ்ப்பாண மாவட்டச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் கடந்த செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண மாவட்டச் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

எந்தவொரு அபிவிருத்தி திட்டங்களையும் தனது அனுமதியின்றி நடைமுறைப்படுத்தக் கூடாது என்று யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர் அங்கஜன் இராமநாதன், யாழ்ப்பாண மாவட்டச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கடந்த செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண மாவட்டச் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

பிரதேச செயலகங்களின் மூலமாக தற்போது நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த விபரங்களை தமக்கு வழங்குமாறும் அந்தக் கடிதத்தில், அங்கஜன் இராமநாதன் கோரியுள்ளார்.

அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களால் அங்கீகாரமளிக்கப்பட்ட எல்லா திட்டங்கள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்களும், தமது இணை அனுசரணையுடன் தான் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.திட்டங்களை, தமக்குத் தெரியாமல் அல்லது தமது ஒப்புதல் இல்லாமல், பிரதேச செயலர்கள் செயற்படுத்தக் கூடாது என்றும் அவர் கண்டிப்பாக அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன், தமது நேரடிப் பிரதிநிதியாக தனது தந்தை சதாசிவம் இராமநாதனை நியமித்துள்ளதாகவும், அவருக்கு யாழ். மாவட்டச் செயலகத்தில் பொருத்தமான அலுவலகத்தை ஏற்படுத்திக் கொடுக்குமாறும், அந்தக் கடிதத்தில் யாழ். மாவட்ட செயலாளருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

படிப்பறிவு இல்லாத அரச வேலை மாத சம்பளத்துக்கும் சீதன கல்யாணதுக்கும் அலையும் யாழ்ப்பாண நடுத்தர கும்பல்களின் உதவியுடனும் மீத பிராடுகளின் துணையோடு ஏமாற்றி தேர்தலில் வென்றுவிட்டு,இன்று படித்து முறையாக அரச நிர்வாகத்தில் இருப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் அளவுக்கு இவர்கள் துணிவும்,குடும்பமுறை உறவுகளை உள்ளே வைத்து கொண்டு பிஸ்டல் புகழ் ராமநாதனைக்கு கச்சேரி கன்டினீல் இருக்க கூட தகுதி இல்லை.இந்த தேசத்தின் எதிர்காலத்தை இந்த மாதிரி படித்த காவாலிகளும்,மீதி அரச வேலைக்காக அலையும் அயோக்கியர்களின் வாக்குகளும் தீர்மானிக்கும் வரை இந்த தேசத்தை காப்பாற்ற முடியாது.