தமிழ் மக்களின் உரிமைகளுக்கு அஞ்சாமல் குரல் கொடுக்க கூடியவர்களுக்கு வாக்களியுங்கள் – பல்கலைகழக மாணவர் ஓன்றியம்!

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக அஞ்சாமல் குரல்எழுப்ப கூடிய ஆளுமைகளை கண்டு வாக்களியுங்கள்.

கட்சி எல்லைகளுக்கப்பால் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக அஞ்சாமல் குரல் எழுப்ப கூடிய ஆளுமைகளை கண்டு வாக்களியுங்கள். என யாழ்ப்பாண பல்கலைகழக பல்கலைகழக மாணவர் ஓன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் அர்ப்பணிப்போடு இருக்கும் கட்சிகளை தெரிவு செய்யுங்கள் கட்சி எல்லைகளுக்கப்பால் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக அஞ்சாமல் குரல்கொடுக்ககூடியவர்களை அடையாளம் கண்டு வாங்களியுங்கள் என மாணவர் ஒன்றியம் தனது அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மக்கள் விரக்தி மனோநிலையிலிருந்து விலகி வாக்களிக்க முன்வரவேண்டும் எனவும் பல்கலைகழக மாணவர் ஒன்றியம் மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தேர்தலுக்கு முன்னர் எட்டப்படமுடியாமல் போன ஒற்றுமையை தேர்தலின் பின்னராவது செயற்பாட்டு தளத்தில் எட்ட முடியுமென நம்பிக்கைகொண்டுள்ளோம் என யாழ்ப்பாண பல்கலைகழக பல்கலைகழக மாணவர் ஓன்றியம் தெரிவித்துள்ளது.