உட்கட்சி விவகாரத்தில் வெளிநபர்கள் தலையிட அனுமதிக்க மாட்டோம் – கஜேந்திரகுமார்!

273

மணிவண்ணன் விவகாரம் உட்கட்சி விவகாரத்தில் வெளிநபர்கள் தலையிட நாம் அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்துள்ளார், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.
இன்று தனியார் ஊடகம் ஒன்றில் ஒளிபரப்பான அரசியல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்..

மணிவண்ணன் விவகாரம் உட்கட்சி விவகாரம் இதில் வெளி நபர்கள் தலையிட நாம் அனுமதிக்கப் போவதில்லை.இதுகுறித்து பலவிதமாக பேசப்படுகிறது. தேர்தல், பதவிநிலை போட்டி என சொல்கிறார்கள் இது எதுவுமே இந்த விடயத்தில் சம்பந்தப்படவில்லை.

25 பேரை கொண்ட மத்தியகுழு கூடி இது குறித்து ஆராய்ந்து முடிவெடுத்துள்ளது. அந்த முடிவை மணிவண்ணனுக்கு அனுப்பி வைத்துள்ளோம் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் தனக்கு கிடைத்ததாக மணிவண்ணன் உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால் அதில் கையொப்பம் இல்லை என்று அறிவித்துள்ளார்.

தலைவர், செயலாளர் கையொப்பத்துடன் பதிவு தபாலில் மத்திய குழுவின் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. மணிவண்ணனின் பதிலை மத்திய குழு எதிர்பார்க்கின்றது அது கிடைத்த பின்னர் மணிவண்ணன் விவகாரம் கட்சி உறுப்பினர்களுக்கு பகிரங்கப்படுத்த படும்.

இப்போதைக்கு மணிவண்ணன் விவகாரத்தில் எதையும் பேச முடியாது என்றார்.