ஜெகத் கஸ்பர் அடிகளார் எதற்காக பொய் கூறுகிறாா்?

188

இதை எழுதுவதா?, வேண்டாமா? என்ற நீண்ட தயக்கத்தின் பின்பே இதை எழுதுகிறேன்.

ஜெகத் கஸ்பர் அடிகளார் தலைவரிடம் எடுத்த நேர்காணலைப் பார்த்தேன்.

இவர் மீது எனக்கு ஒன்றல்ல, இரண்டல்ல எக்கச்சக்க விமர்சனங்கள் இருக்கிறது. அதைப் பிறகு கதைப்போம்.

தலைவரை பெரும்பாலான எதிரிகள் கூட ஒரு போராளியாக/ புரட்சியாளனாக ஏற்றுக் கொள்ளும் நிலையில் இருக்கிறார்கள். ஆனால் அதையும் தாண்டி தலைவர் இந்த நூற்றாண்டின் தலையாய கீழைத்தேய சிந்தனையாளர்களில் ஒருவர் என்பது இன்னும் சரியாக வெளிப்படுத்தப்படவில்லை.

அது இப்போதுதான் ஓரளவு பல்வேறு வழிகளில் வெளிபட்டுக் கொண்டிருக்கிறது. அதற்கு மேலும் வலுச் சேர்ப்பதாக அடிகளாரின் நேர்காணலைச் சொல்லலாம்.

ஆனாலும் எல்லோரையும் பொய்யர்கள் என்று சொல்லும் அடிகளார் தானும் தெரிந்தோ தெரியாமலோ அதைத்தான் செய்கிறார். இது அவரைப் பாதிப்பது குறித்து எமக்கு எந்தக் கவலையும் இல்லை. ஆனால் அது தலைவரின் பிம்பத்தை சிதைக்கக் கூடாது என்பதே நமது கவலை.

இவர் திமுகவின் லொபியைக் காவுபவர் என்பது பலருக்குத் தெரிந்ததுதான். ஆனால் தெரியாத ஒன்று இருக்கிறது. இவர் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்த கேபியின் கதைகளை நம்புபவர் என்பது பலருக்குத் தெரியாது.

நேர்காணலின் ஓரிடத்தில் தலைவருடன் கடைசி நேரத்தில் செய்மதித் தொலைபேசியூடாக பேசிய ஒருவர் தன்னுடன் பேசியதாக ஒரு தகவலைச் சொல்கிறார் அடிகளார். தலைவர் ஒரு போதும் நேரடியாக அதுவும் இக்கட்டான சூழல்களில் ஒருவருடனும் பேசுவதில்லை என்பது இயக்க மரபை அறிந்த அனைவருக்கும் தெரியும். அத்தோடு இவர் கேபியைத்தான் குறிப்பிடுகிறார் என்பதும் நம் எல்லோருக்கும் தெரியும்.

பிரச்சினை இப்போது அதுவல்ல. 2009 மே 17 ம் திகதிக்கு ஒரு வாரத்தின் முன்பு அதாவது பத்து/ பதினோராம் திகதிகளில் சம்மந்தப்பட்ட நபருடன் ( அதாவது கேபி) செய்மதித் தொலைபேசியினூடாகப் பேசிய தலைவர் ” நான் எனது இரு பிள்ளைகளை நாட்டுக்காக இழந்து விட்டுத்தான் உன்னுடன் பேசிக் கொண்டிருக்கிறேன்” என்று கூறியதாக அடிகளார் பதிவு செய்கிறார்.

இது மிகவும் தவறான தகவல். பாலச்சந்திரன் கொல்லப்பட்டது மே19. சாள்ஸ் அன்ரனி குப்பி கடித்து வீரச்சாவடைந்தது மே17. துவாரகா மட்டுமே அப்போது உயிருடன் இல்லை.
(அதுவும் இதுவரை சரியாக உறுதிப்படுத்தப்படவில்லை)

நிலைமை இப்படியிருக்க தலைவர் ஒரு வாரத்தின் முன்பே இப்படி சொல்லியிருப்பதாக அடிகளார் சொல்வது எத்தகையது?

சாதாரண தகவல் அறிவே போதும் இதை உறுதி செய்ய..

சீமான் போன்றவர்களை “பொய்யர்கள்” என்று சொல்லும் அடிகளார் தானும் அதே தவறைத்தான் செய்கிறார்.

அத்தோடு அடிகளார், கேபி/ திமுக கும்பல்களின் தகவல்களை உறுதியான ஆதாரமாக முன்வைப்பது வரலாற்றைத் திரிவு படுத்தவே உதவும்.

இது அடிகளாரைக் களங்கப்படுத்துவது குறித்து எமக்கு எந்தக் கவலையுமல்ல. ஆனால் வரலாற்றில் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்ற சிந்தனையாளனின் உண்மை முகம் / கன பரிமாணம் சிதைந்து போகக் கூடாது என்பதே நமது கவலை.

Parani kirusnarajani

https://www.facebook.com/parani.krisnarajani