வாசிப்பு பழக்கத்தால் உண்டாகும் பலன்கள் பத்து

78
  1. அட கற்றுக்கொள்ள எவ்வளவு இருக்கு!! கற்றது கைமண் அளவு கல்லாத்து உலகளவு என்பது பொய் என்பதை உணர்வீர்கள்.
    ஏன் என்றால் கற்றது ஒரு மண்ணைவிட குறைவு கல்லாத்து பிரபஞ்ச அளவு என்ற உண்மை புரிந்திருக்கும்..
  2. எமக்கான ஒரு வட்டம், எங்களுக்குத்தான் எல்லாம் தெரியும், நான் என்ற ஆணவங்கள், கிணத்து தவளை தத்துவங்கள் எல்லாம் தகர்த்து போய்விடும்.
  3. ஞாபக சக்தி அதிகரிப்பதுடன் மனதுக்கு ஒரு புத்துணர்வு ஏற்படுவதையும், மெல்ல மெல்ல மன முதிர்ச்சி அடைவதையும் அவதானிக்கலாம்.
  4. புதிய படைப்பாற்றல் யுக்திகள் (creativity) அதிகரிக்கும். மொழிப்புலமை வளர்ச்சி அடையும்.
  5. ஒரு சிறந்த நல்ல புத்தகம் உங்களுக்கு குறைந்தது 9 புத்தங்களுக்கு வழிகாட்டியிலுக்கும்..
  6. வாசிப்பவர்களின் பேச்சில், பழக்கங்களில் சிந்தனைகளில் எண்ணங்களில் உயரிய மாற்றங்கள் தென்படும் (அதை இன்னும்மொரு வாசிப்பவராலேயே அடையாளம் காணமுடியும் – கற்றாரை கற்றாரே காமுறுவர்)
  7. தேடல்கள் அதிகரிக்கும். அந்த தேடல்களால் வாசிப்பதற்கும் கற்றுக்கொள்வதற்குமான ஆயுள் எமக்கு இல்லை என்ற புரிதலும் கவலையும் ஏற்படும். (அதன் காரணமாகவே தான் சாகும்போதுகூட (தூக்கு தண்டனை)புத்தகம் படித்து முடிக்க சில மணி நேரம் கேட்டார் பகத்சிங், தான் வாசிக்கும் புத்தகத்தை படித்து முடிப்பதற்காக ஒருநாள் அறுவை சிகிற்சையை தள்ளி வைக்குமாறு கேட்டார் அறிஞர் அண்ணா, புத்தகங்களை மேலிருந்து கீழே நீங்கள் படிக்கும் ஒவ்வொரு நொடியும் நீங்கள் கீழிருந்து மேலே போகுன்றீர்கள் என்றார் அப்துல்கலாம் ஐயா அவர்கள்)
  8. முரண்பாடுகள், பிரச்சனைகள், EGO களை தகர்க்கிறது வாசிப்பு. மேன்மை குணங்களையும் பணிவு தன்மையையும் ஒருங்கே கொண்டுவருகின்றது.
  9. அவப்பொழுதுகளை தவப்பொழுதுகள் ஆக்குகின்றது வாசிப்பு. வீணான பொழுதுகளையும், தேவையற்ற விடயங்களையும், தவிர்த்து அறிவை விரிவு செய்ய அந்த நேரத்தை கற்றுக்கொடுக்கின்றது வாசிப்பு
  10. மங்கலாக தெரியும் கண்ணாடியை அதை ஜொலிக்கவைக்கும் திராவகம் மூலம் கழுவி ஜொலிக்க வைப்பதுபோல மனங்களை ஜொலிக்க வைக்கின்றது வாசிப்பு

– ஜனார்த்தன்