வாழ்க்கையில் ஒரு புத்தகத்தைக்கூட வாசிக்காதவன் எல்லாம் யாழ் நூல் நிலையம் எரித்ததை நினைவு கூர்கிறான் என ஒருவர் கிண்டலாக எழுதியிருந்தார்.
என்னடா இது? இந்த மகிந்த ராஜபக்சாவின் விசுவாசிக்கு ஏன் இத்தனை எரிச்சல் ஏற்படுகிறது என்று கொஞ்சம் விசாரித்து பார்த்தேன்.
1981ம் ஆண்டு எரிக்கப்பட்டதை இப்பவும் தமிழர்கள் நினைவு கூர்கிறார்களே என்பதைவிட இம்முறை வழக்கத்தைவிட அதிகளவில் நினைவு கூர்கிறார்களே என்ற எரிச்சல் அது என்பதை புரிந்து கொண்டேன்.
ஆம். உண்மைதான். இந்த கொரோனா நெருக்கடிகளுக்கு மத்தியிலும் குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழர்கள் பல்வேறு வடிவங்களில் நினைவு கூர்ந்துள்ளார்கள்.
அதுவும் ஜெர்மனியில் யூதர்களின் நூல்கள் எரிக்கப்பட்ட அதே சதுக்கத்தில் யாழ் நூல் நிலையம் எரிக்கப்பட்டதை தமிழர்கள் நினைவு கூர்ந்துள்ளனர்.
இங்கு ஆச்சரியம் என்னவெனில் இந்த நிகழ்வில் அதிகளவு அடுத்த சந்ததியினரான இளையவர்கள் பங்கு பற்றியுள்ளனர்.
எந்த சந்ததி தமிழை மறந்துவிடும் என்றார்களோ, எந்த சந்ததி தமது வேர்களை தேடமாட்டார்கள் என்று கூறினார்களோ அந்த சந்ததி பங்குபற்றியிருக்கிறது.
இந்த அடுத்த சந்ததியினர் தாம் வாழும் நாடுகளில் உள்ள மக்கள் என்ன மொழி பேசுகிறார்களோ அந்த மொழியில் தமக்குரிய நீதியை கோருகிறார்கள்.
எனவே இனி உலகம் செவிடாக இருக்க முடியாது. ஏனெனில் எமது அடுத்த சந்ததி பேச ஆரம்பித்து விட்டார்கள்.
மிக விரைவில் எமக்குரிய பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கை உருவாகிறது.
இதனால்தான் இலங்கை இந்திய அரசுகளின் விசுவாசிகளுக்கு எரிச்சல் ஏற்படுகிறது.