கனடா பிரதமரே ஒரு நிமிடம்…

76

ஒரு தனி மனிதன் மீது கட்டவிழ்க்கப்பட்ட அநீதியான இனவெறி படுகொலைக்காக மண்டியிட்டு வருந்தி கருப்பின மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தமைக்கு கனடியப் பிரதமர் அவர்களுக்கு பாராட்டுக்கள்!

ஆனால் முள்ளிவாய்க்காலில் 1 1/2இலட்சம் தமிழர்கள் ஓரிரு நாட்களில் இந்த உலகை சாட்சியாக வைத்து மிகக் கொடூரமாக கொன்று குவிக்கப்பட்ட வேளையில் எங்கள் உறவுகளிற்காக தமிழின படுகொலைகளிற்கு நீதி கேட்டு தமிழர்கள் மண்டியிட்டு போராடியும் இந்த உலகமே ஏறெடுத்துப் பார்க்கவில்லையே?

உலக மக்கள் போல் தானே எம் கண்ணீரும் உப்புக் கரிக்கின்றது?

தமிழர் உயிர் மட்டும் என்ன மலிவானதா?

நீங்கள் யாரும் எமக்காக மண்டியிட வேண்டும் என நாம் கேட்கவில்லை!

நீதி வேண்டும் எமக்கும்!

நீதி மட்டுமே வேண்டும் எமக்கு!