கறுப்பின மக்களுக்காக மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட கனடா பிரதமர்!

80

கனடாவில் ஒட்டாவாவில் நடந்த பாரிய ஊர்வலம் ஒன்றில், அன் நாட்டு பிரதமர் ஜஸ்டின் ரூடர் கலந்து கொண்டார். கறுப்பின மக்களுக்கு ஆதாரவாக நடந்த குறித்த போராட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மண்டியிட்டு தனது மன்னிப்பை கோரிய விடையம் உலக தலைவர்களை ஒரு முறை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

மக்களோடு மக்களாக நின்ற கனடா பிரதமருக்கு சிறிய அளவிலேயே பாதுகாப்பு இருந்தது. மேலும் மக்களே அவருக்கான பாதுகாப்பை வழங்கி இருந்தார்கள் என்றும் கூறலாம். ஒரு நாட்டின் தலைவர் எப்பொழுது பாதுகாப்பு எதுவும் இன்றி, மக்களோடு வீதியில் செல்ல முடிகிறதோ. அதுவே அவரது நல்ல ஆட்சிக்கு எடுத்துக்காட்ட அமையும் என்பார்கள். அதுவே தற்போது நடந்துள்ளது.

அமெரிக்காவில் கறுப்பின மக்களுக்கு எதிராக நடந்த கொடுமைக்காக, கனடா நாட்டு பிரதமர் மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட விடையம் வைரலாக பரவி வருகிறது.