காலத்தின் பதிவு பிரிகேடியர் சொர்ணம்.

87

அது ஆனையிறவின் மீதான புலிகளது முதலாவது வலிந்த தாக்குதலான ஆகாய கடல்வெளி நடவடிக்கையின் தொடர்ச்சியாக ஆனையிறவில் தங்கியிருந்த படைகளின் மீதான முற்றுகை இறுகி எந்நேரமும் முகாம் புலிகளிடம் விழுந்துவிடலாம் என்கின்ற சூழ்நிலையில் அப்போதய சிங்களத்தின் நம்பிக்கை நட்சத்திரம் பிரிகேடியர் டெல்சில் கொப்பேகடுவ அவர்களின் தலைமையில் வெற்றிலைக்கேணியில் ஒரு தரையிறக்கத்தைச் செய்து அங்கிருந்து நகர்ந்து ஆனையிறவிஅ உள்ள படையினருடன் தொடுப்பை ஏற்படுத்துவதுடன் வெற்றிலைக் கேணியிலிருந்து ஆனையிறவுவரையான ஏறத்தாள 10கிமீற்றர் நீளமான வழங்கல்பாதையைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக்கொண்டு பலவேகய 1,2 எனும் படைநடவடிக்கைகளைச் சிங்களம் செய்தது.

புலிகள் புல்லாவெளி மண்டலாய் பகுதிகளில் வைத்து தளபதி சொர்ணம் அவர்களின் தலைமையில் புலிகளின் வரலாற்றில் முதலாவது ஊடறுப்புத் தாக்குதல் என்று சொல்லக்கூடிய ஊடறுப்பு தாக்குதல் ஒன்றைச் செய்தனர்.

முழு ஆகவெ ஆனையிறவு நடவடிக்கையிலும் இராணுவத்திற்கு ஓரளவிற்காவது சேதாரத்தை ஏற்படுத்தியது இந்த ஊடறுப்புத் தாக்குதல் மட்டுமே.

இந்நடவடிக்கை தொடர்பில் சண்டே ரைம்ஸில் தனது வராந்த ஞாயிறு அலசலில், குறிப்பிட்ட இக்பால் அத்தாஸ் அவர்கள் “பிடிகேடியர்” சொர்ணம் என்று விளித்திருந்தார். அன்று புலிகள் போராளிகள் வீரமரணமடையும்போது மட்டுமே தகுதிநிலைகளைக் குறிப்பிடுவதை வழக்கமாகக்கொண்டிருந்த காலகட்டத்தில், அதுவும் 2009 இல் சொர்ணம் அண்ணை வீரச்சாவடையும்போது பிரிகேடியர் என்ற தகுதிநிலை வழங்கப்பட்டார் என்கின்ற பின்னணியில் 1991 இல் அத்தாஸ் இவ்வாறு விளித்ததற்கு ஒரேயொரு காரணம் மட்டுமே இருக்கமுடியும்.

மேற்கத்தய ஊடகங்கள் இலங்கையில் “இரு இராணுவங்கள்” என்று மேற்கோள் கூறியதையிட்டு ஆகவெயின் ஒருங்கிணைப்பு தளபதி பொட்டு அவர்கள் விடுதலைப் புலிகள் இதழில் இவ்வாறு எழுதியிருந்தார் “அளவுகோல் போர்வலு எனின் அது சரியானதே” என்று.

2008ஆம் ஆண்டு சித்திரை மாதம் இரண்டு சிறிய வலிந்து தாக்குதல்கள் சொர்ணம் அன்ணரின் தலைமையில் தமிழர் தாயகத்தின் இதய பூமியாகிய மணலாறில் மேற்கொள்ளப்பட்டது.

முதலாவது தாக்குதல் சித்திரை மாதம் 27ஆம் தேதியும் இரண்டாவது தாக்குதல் ஒரு நாள் இடைவெளிவிட்டு சித்திரை 29 ஆம் திகதியிலுமாக இரண்டு வலிந்து தாக்குதல்கள்(Offensive)
நம்மவர்களால் எதிரியின் நிலைகள் மீது தொடுக்கப்பட்டது.

இரண்டுமே நாம் எதிர்பார்த்த வெற்றியை எமக்கு தரவில்லை.

இரண்டு நாட்கள் கடுமையான தாக்குதல்களால் எதிரி அச்சம் கொண்டான்.

மூன்றாவது நாளும் தமது முன்னரங்க நிலைகள் மீது தாக்குதல் நடைபெறக்கூடும் என்ற சந்தேகத்தினால் அன்றிரவு எதிரி மணலாறு காடே அதிரும் வண்ணம் தொடர்ச்சியாக பயங்கர எறிகணைத் தாக்குதல் நாடாத்தினான்.

அந்தச் செறிவான எறிகணைத் தாக்குதல் மணலாறு கட்டளைத் தலைமையகத்தை நோக்கியே அதிகம் மேற்கொள்ளப்பட்டதால் சொர்ணம் அண்ணர் விழுப்புண் அடைந்தார்.

தாக்குதல் எதிர்பார்த்தளவு பலனளிக்காத காரணத்தால் சிகிச்சைபெற வைத்தியசாலைக்கு செல்லமறுத்துவிட்டார்.

மருத்துவப் பொறுப்பாளர் திரு.இ.இரேகா அவர்களும்
அங்கிருந்த மூத்த போராளிகள் எவ்வளவு ஆலோசனை சொல்லியும் மூத்ததளபதி கேட்கவில்லை,மாறாக அவரது கண்கள் இரத்தச் சிவப்பாக மாறியது.

இப்போது எனது தடவை
நெஞ்சில் உள்ள துணிவு எல்லாத்தையும் வரவழைத்து என்னைத் திடப்படுத்திக்கொண்டு புதுக்குடியிருப்பு பொன்னம்பலம் வைத்தியசாலைக்குச் செல்லலாம்.

அங்கே Dr.சிவபாலன் அவர்களைக்கொண்டு
உடலில் உள்ள எரிகணைச் சிதறல்களை
(Foreign Body Removal) அகற்றிவிட்டு உடனடியாகவே நீங்கள் விரும்புவது போல களமுனைக்குத் திரும்பலாம் என்றேன்.

எனது இந்த ஆலோசனைக்காக
என் மீதும் பெரும் எரிந்து விழுந்தார்.

என்னை அவரது கட்டளைப்பீடம் அமைந்திருந்த ஜீவன் தங்ககத்தில் தொடர்ந்து நிற்க அனுமதிக்கவும் இல்லை.

சில வேளை பகலிலும் எறிகணைத் தாக்குதல் அந்த தங்கம் நோக்கி மேற் கொள்ளப்பட்டால் மருத்துவ அணியும் பாதிக்கப்படும் என அவர் நினைத்திருக்கக்கூடும்.

கொஞ்ச நேரம் கழித்து மீண்டும் எங்களை அழைத்தார்.

“தனக்கு அங்கேயே வைத்து சிகிச்சியளிக்க முடியாதா…?” என்று கேட்டார்.”

யான் தயங்கினேன்!

காரணங்களை தேடித் தேடி அடுக்கிக் கொண்டே போனேன்.

சிகிச்சைக்குரிய உபகரணங்களும் இல்லை அதைவிட ஒரு போர்க்களத்துக்கு பின்னே வைத்து உங்களுக்கோ அல்லது வேறு போராளிகளுக்கோ சத்திரசிகிச்சை செய்வது நல்லதல்ல என மறுத்தேன்.

ஆனால்,

தமிழர் படையின் வீரத்தளபதியோ நாங்கள் சொல்லும் எதையுமே கேட்பதாயில்லை.

கட்டளை மையத்திலிருந்து தான் விலத்த முடியாது என்பதை ஆணித்தரமாக விளக்குவது போல சில விடையத்தினை கூறியவாறே மீண்டும் கேட்டார்.

இப்போது யான் எமது மருத்துவப்பிரிவின் பொறுப்பாளர் ரேகா அவர்களின் முகத்தைப் பார்த்தேன்.

பொறுப்பாளர் இரேகா அவர்கள் நிலைமையைப் புரிந்து கொண்டவராய் தலையை அசைத்ததுடன் அதற்குரிய சத்திரசிகிச்சை உபகரணங்களையும் மயக்க மருந்து உட்பட சில மருந்துகளையும் (Surgical Instruments,Some Medicines) புதுக்குடியிருப்பிலிருந்து உடனடியாகவே பெற்றுத்தந்தார்.

ஏற்கனவே நீரிழிவு(Diabetes Mellitus) எனும் நிலையில் இருந்த அவரது இரத்தத்தில் உள்ள வெல்லத்தின் அளவினையும்(Blood Glucose)குருதி அமுக்கத்தையும்(Blood Pressure)சோதித்து பாதுகாப்பான நிலையில் உள்ளதென்பதையும் உறுதிப்படுத்திவிட்டு சிறு சத்திரசிகிச்சை மூலம் அவரின் உடலில் இருந்த எறிகணைச் சிதறல்களை வெளியே எடுத்தோம்.

சண்டையை வெல்லாமல் தான் நேசிக்கும் தானைத் தலைவரின் முகத்தை பார்க்கமாட்டேன் என்றிருந்த எங்கள் வீரத்தளபதியையும் போராளிகளையும் தமிழினம் மறைந்துவிடுமா?

தமிழினத்தின் மூத்ததளபதியின் வரலாறு மிகவும் பெரியது.

அந்த வரலாறு நீண்ட நெடிய பல பக்கங்களைக் கொண்டது.

அந்த வரலாற்றின் ஒரு சில வசனங்களை மட்டுமே இங்கு பதிவு செய்துள்ளேன்.

அந்த வீரத்திலகத்தின் வரலாறை யாரும் எழுத முன்வந்தால் மேலும் சில வசனங்களை சொல்ல சித்தமாகவுள்ளேன்.

வீரவணக்கம் சொர்ணம் அண்ணை🙏


தகவல்மூலம் மூத்த களமருத்துவர்.
Tharshan Tharun