காவல்நிலையம் மீது தாக்குதல் நடத்தியதன் எதிரொலியாக பட்டாசுகள் விற்பனை மட்டுப்படுத்தப்பட உள்ளது.
சனிக்கிழமை நள்ளிரவு வேளையில் Champigny-sur-Marne நகர காவல்நிலையத்தை சுற்றி வளைத்த 40 பேர் கொண்ட குழு ஒன்று, காவல்நிலையம் மீது தாக்குதல் நடத்தியது. நிலையம் மீது பட்டாசுகள் எறிந்தும், இரும்பு கம்பிகள் கொண்டும் தாக்குதல் நடத்தியிருந்தார்கள்.
அதைத் தொடர்ந்து, உள்துறை அமைச்சர் Gérald Darmanin தெரிவிக்கும் போது, “நாம் பட்டாசுகள் விற்பனையை மட்டுப்படுத்தவுள்ளோம். குறிப்பாக mortiers d’artifice வகை பாரிய பட்டாசுகளை இணையத்தில் விற்பனை செய்யப்படுவதை முற்றாக நிறுத்தியும், நேரடியாக கடைகளில் விற்கப்படும் போது அனுபவம் உள்ளவர்களுக்கும், பெரியவர்களுக்குமே விற்கப்படும்”எனவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பான தீர்மானம் வரும் 2020 நவம்பர் 9 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் எனவும் உள்துறை அமைச்சர் குறிப்பிட்டார்.