காவற்துறையினருக்கும் இளைஞர் குழுக்கும் இடையில் பலத்த மோதல்

40

மகிழுந்து ஒன்றை 30 கிலோமீற்றர் தூரம் வரை காவல்துறையினர் துரத்திச் சென்றனர்.

இச்சம்பவம் பரிசில் நேற்று நள்ளிரவு இடம்பெற்றுள்ளது. பரிஸ் 19 ஆம் வட்டாரத்தின் Porte de la Villette பகுதிக்கு அருகே வீதி கண்காணிப்பில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர். உள்ளிருப்பு அறிவிக்கப்பட்ட அரை மணிநேரத்தில் (12.30 மணி அளவில்) Volkswagen Golf 7 மகிழுந்து ஒன்றை தடுத்து நிறுத்தினர். மகிழுந்துக்குள் அதிகளவான இளைஞர் குழு ஒன்று இருந்ததால் சந்தேகத்தின் அடிப்படையில் அவர்களை தடுத்து நிறுத்த முற்பட்டனர்.

ஆனால் அவர்கள் காவல்துறையினரிடம் இருந்து தப்பித்து A1 நெடுஞ்சாலையில் தப்பிச் சென்றனர். காவல்துறையினர் கிட்டத்தட்ட 30 கிலோமீற்றர்கள் அவர்களை துரத்திச் சென்றனர். இறுதியாக மகிழுந்து Tremblay-en-France நகருக்குள் நுழைந்தது.

அதற்குள்ளாக அவர்களது மகிழுந்து தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. மகிழுந்து நிறுத்தப்பட்டு அதற்குள் இருந்து நால்வர் இறங்கி தப்பி ஓடினர். மீதமான இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.