இதுவரை கிழித்தது போக,கரை சேர வேண்டிய கட்டுமரங்கள் –

97
[poll id= “2”]

யாழ் கிளி தேர்தல் தொகுதியில் போட்டியிடும் மாவை சேனாதிராஜா சித்தார்த்தன் இருவரும் முற்றுமுழுதாக நிராகரிக்கப்பட வேண்டிய வேட்பாளர்கள்.

ஒருமுறை இரண்டு முறையல்ல எத்தனை முறை பாராளுமன்ற உறுப்பினராக இருந்துவிட்டார்கள்.எதை சாதித்தார்கள் இனியும் இதை சாதிக்க போகிறார்கள்…

#மாவை சேனாதிராஜா தனது மகன் மாகாண சபை அல்லது பாராளுமன்ற உறுப்பினர் ஆகும் வரை அரசியலில் இருந்து ஓய்வு பெற மாட்டேன் என்று அதிக நண்பர்களிடம் கூறியுள்ளார்.மேலும் தனது கனவு ஒருமுறையாவது வடக்கின் முதலமைச்சராக இருக்க வேண்டும் என்பது தான் எனது அரசியல் வாழ்க்கையில் கிடைத்த வெற்றி இது அவரின் அடுத்த புலம்பல்….

#இந்தத் தேர்தலில் நான் தோல்வி அடைந்தாலும்.வடக்கின் முதலமைச்சர் தேர்தலில் வெற்றி அடைவேன் எனது மகனுக்கான அரசியலுக்காக.இது குடும்ப அரசியல் ஆகவே இவரை தூக்கி எறிய வேண்டியது மிக முக்கியமான ஒன்று.

இத்தனை ஆண்டுகளாக தனது அரசியலில் சொத்து சுகத்தை சேர்த்ததை தவிர வேறு எதையும் செய்ததில்லை முக்கியமாக மக்களுக்கு அரசியலில் இருந்து…

#அடுத்து கும்பகர்ணனின் சகோதரரான சித்தார்த்தன்.வீட்டில் தூங்குவதை விட பாராளுமன்றம் கட்சி நிகழ்வுகள் அனைத்திலும் தூங்குவதில் முதலிடம் பெற்றவர் இவராகத்தான் இருக்கும்.

கடந்த முறை அதிக தடவை பாராளுமன்றம் செல்லாத தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் முதலிடம் பெற்று மக்கள் மத்தியில் அதிக விருப்பத்தை பெற்றுக் கொண்டார்.ஆனால் இவர் வீட்டு சின்னத்தில் கேட்பதற்கு பதிலாக கட்டில் சின்னத்தில் கேட்டிருந்தால் மக்கள் இவரை நினைவில் வைத்திருப்பார்கள்…

#இவரும் சரி இவர் சார்ந்த கட்சியில் போட்டியிடும் கஜதீபன் இருவரும் தேர்தல் வருவதற்கு முன்னமே வீதியை நாசம் செய்கிறார்கள்.இப்படித்தான் தங்களை மக்களுக்கு அடையாளப்படுத்த வேண்டிய நிலைமையில் இவர்கள் இருக்கிறார்கள்.இதுதான் இவர்கள் இன்றைய நிலைமை.

#தமிழ் இளைஞர்கள் மற்றும் விடுதலைப்புலிகள் சார்ந்த ஆதரவாளர்கள் ஆகியோரின் படுகொலையில் மிகவும் முன்னணியில் இருந்தவர் சித்தார்த்தன். அதனால்தான் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட பொழுது இவர் நிராகரிக்கபட்டார் விடுதலைப்புலிகளின் தலைவர் அவர்களால்….

#கூட்டமைப்பின் உருவாக்கத்தின்போது சிவராமன் அவர்களால் மிகவும் ஆதாரபூர்வமான தகவல்கள் வைக்கப்பட்டது தேசியத் தலைவரிடம்.ஆயிரக்கணக்கான இளைஞர்களின் படுகொலைக்கு நேரடி சொந்தக்காரர் சித்தார்த்தன்.சமாதான காலத்தில் இவரால் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தாயார்கள் வன்னிக்கு வந்து அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்களிடம் அதிகமான முறைப்பாடுகளை சமர்ப்பித்து சென்றார்கள்.இன்று வரை விடை தெரியாத கண்ணீருக்கு சொந்தக்காரர்களாக இவரால் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் இருக்கிறார்கள்.இவருக்கு வாக்களிக்கும் நீங்களும் இவரால் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கண்ணீருக்கு பதில் கூற வேண்டியவர்கள்.அதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்…

#ஏன் வாக்களிக்கிறோம் யாருக்கு வாக்களிக்கிறோம் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.கடந்த காலத்தில் இவர்களின் செயல்பாடுகளை நினைவில் வைத்து.உங்களின் வாக்குகளுக்கு பின்னால் ஆயிரக்கணக்கான உறவுகளின் கண்ணீரும் எதிர்பார்ப்பும் உள்ளது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் எப்பொழுதுமே…

Manikam sinnathampi