கட்டுப்பாட்டை இழந்த ஜொ்மன்

10

ஜெர்மனியில் கட்டுப்பாட்டை இழந்த கொரோனா தொற்று! தொற்று விகிதம் 0.99 இல் இருந்து 1.17 ஆக உயர்ந்ததுள்ளது. இதன் காரணமாகக் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டிய நிலைக்குள் ஜேர்மன் அரசு தள்ளப்பட்டுள்ளது.

டிசம்பர் 16 முதல் ஜனவரி 10 வரை பெரும்பாலான கடைகளை மூடிவைப்பதற்கு ஜேர்மன் திட்டம்.

கட்டுப்பாடுகளை கடுமையாக்கி, கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்த,ஜேர்மனி அரசாங்கம் எதிர்வரும் புதன்கிழமை முதல் ஜனவரி 10 வரை பெரும்பாலான கடைகளை மூட திட்டமிட்டுள்ளது.அதிபர் அங்கலா மேர்க்கலுக்கும் மாநிலத் தலைவர்களுக்கும் இடையிலான கூட்டத்தின் பின்னர் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.இந்நிலையில் முன்னர் நாடளாவிய ரீதியிலான கட்டுப்பாடுகளுக்கு ஆதரவளிக்காத ஜேர்மனியின் மாநிலங்களும் இந்த நடவடிக்கைக்கு ஆதரவை தெரிவித்துள்ளன.அதன்படி பல்பொருள் அங்காடிகள் மற்றும் மருந்தகங்கள் போன்ற அத்தியாவசிய கடைகள் மற்றும் வங்கிகள் மட்டுமே திறந்த நிலையில் இருக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.

ஜெர்மனியில் நள்ளிரவு 12 மணிக்கு (12.12.2020) வெளியான தகவலின்படி புதிதாக +28,438 தொற்றுகள் பதிவாகி உள்ளது. இந்தப் புதிய தொற்றுகளையும் சேர்த்து மொத்த தொற்றுகள் எண்ணிக்கை ஜெர்மனியில் 1,300,516 ஆக உள்ளது.

இதே சமயம் தொற்றிலிருந்து 957,500 பேர் மீண்டுள்ளார்கள், 321,600 பேர் தொற்றுக்குள்ளான நிலையில் உள்ளார்கள்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர்

தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்படுவோர் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்படவர்கள் தற்பொழுது 4,491 ஆக உயர்ந்துள்ளது.

இறப்புகள்

நேற்று ஜெர்மனி புதிதாக +496 இறப்புகளை பதிவு செய்துள்ளது, இதன் காரணமாக மொத்த இறப்புகளின் தொகை (21,466 ஆக உயர்ந்தது.

R-ரேட்-ஒருவர் மற்றவருக்குக் கோவிட் நோயைப் பரப்புக்கும் எண்ணிக்கையானது 7 நாள் மதிப்பு 1.17 ஆகவும் 4 மதிப்பு 1.15 ஆகவும் உள்ளது.

கடந்த வாரம் R-ரேட்-ஒருவர் மற்றவருக்குக் கோவிட் நோயைப் பரப்புக்கும் எண்ணிக்கையானது 7 நாள் மதிப்பு 0.99 ஆகவும் 4 மதிப்பு 0.91 ஆகவும் இருந்தது.

R-ரேட் 1 க்கும் குறைவாக இருக்கும்பொழுது தொற்று நோய் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது என்று கருதப்படுகிறது.

-ஈழம் ரஞ்சன்-