முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முறுகல்,கொரானா தனிமைப்படுத்தலில் முன்னணி : சிங்கள அரசின் நரிதனம்

99

நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு வார நினைவேந்தலில் கலந்து கொண்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் 11 பேரையும் தனிமைப்படுத்த நீதிபதி உத்தரவு!

 1. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
 2. பொதுச் செயலாளார் செல்வராஜா கஜேந்திரன்
 3. தேசிய அமைப்பாளார் விஸ்வலிங்கம் மணிவண்ணன்
 4. சட்ட ஆலோசகர் சுகாஸ்
 5. சட்ட ஆலோசகர் காண்டீபன்
 6. யாழ் மாநகரசபை உறுப்பினர் பார்த்தீபன்
 7. யாழ் மாநகரசபை உறுப்பினர் தனுசன்
 8. யாழ் மாநகர சபை உறுப்பினர் கிருபாகரன்
 9. விஸ்ணுகாந்
 10. சுதாகரன்
 11. தமிழ்மதி

ஆகியோரை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்துமாறு யாழ் நீதிபதியால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் அது தொடர்பான கடிதம் சற்று முன்னர் பொலிஸாரால் வீடுகளுக்குச் சென்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

முற்று முழுதாக மே-18 நினைவேந்தல்கள் நிகழ்வுகளை குழப்புதவற்காக சிங்கள சிறிலங்கா இனவாத அரசு திட்டமிட்டு தமிழ் தேசிய முன்னணி உறுப்பினர்களை கொரானா பழி சுமத்தி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளது.முள்ளிவாய்க்கால் வாரத்தினை தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்த தமிழ்தேசிய முன்னணி உறுப்பினர்களுக்கு முன்னரும் காவல்துறை,அரச படைகளும் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களை விடுத்து வந்தமை குறிப்பிடதக்கது – எடிட்டர்