எமது மக்கள் நுண்கடன் பொறியில் சிக்கி தற்கொலை செய்யும் நிலையை உருவாக்கியவர் மகிந்தவே – கஜேந்திரகுமார்!

142

நுண்கடன் நிறுவனங்களிடமிருந்து எமது மக்களை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் சபையில் தெரிவித்தார்.

யுத்தத்திற்குப் பின்னர் எமது தமிழ் மக்கள் நுண் கடன் பொறியில் சிக்கி தற்கொலை செய்துகொள்ளும் நிலை உருவாக அப்போதைய ஆட்சியாளராக இருந்த வரும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்சவே காரணம். அவரின் ஆட்சியிலேயே நுண் கடன் நிறுவனங்கள் காளான்கள் போன்று முளைத்தது எனவே அவர் ஆரம்பித்துவிட்டதை அவரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென்று இதன்போது கூறினார்.

பாராளுமன்றத்தில் இன்று மத்திய வங்கி நிதி ஒதிக்கீடு மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

காணி உறுதிகள் வழங்கப்படுவது குறித்தும் அரசாங்கம் கூறியிருந்தது. ஆனால் எமது பகுதிகளில் தொடர்ந்தும் காணி அபகரிப்பு இடம்பெற்று வருகின்றது வடக்கில் பல இடங்களில் காணிகள் அபகரிக்கப்படுகின்றது தமிழர்களின் நிலங்களை இராணுவம் கைப்பற்றி விவசாயம் செய்து வருகின்றது. சிங்களவர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

எனவே தமிழர்கள் மீண்டும் பூச்சியத்திலிருந்து வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டி உள்ளது இதற்கு அரசாங்கம் தீர்வுகளை பெற்றுக் கொடுக்க வேண்டும் அரசாங்கம் கண்டிப்பாக களத்திலிருந்து மக்களின் பக்கம் சிந்திக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.