தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலைத் தடைசெய்து, தமிழ் மக்களின் அஞ்சலி செலுத்தும் உரிமையை அரசாங்கம் தடுத்துள்ளமைக்கு எதிராகப் போராடுவதற்காக தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா ஏற்பாடு செய்த அனைத்துக் கட்சிகளின் கூட்டத்துக்கு அழைப்புக் கிடைக்கவில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
அழைப்பு தமக்குக் கிடைக்கவில்லை எனவும் அவ்வாறான நிலையில் தாம் எவ்வாறு கலந்துகொள்வது? எனவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.