“கூட்டமைப்புக்கு வாக்களிப்பது” இனத்துக்குச் செய்யும் துரோகமாகும் – கஜேந்திரகுமார்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்துடன் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துள்ளது . இவர்களின் இந்தச் செயல்பாடானது தமிழ் மக்களுக்கு உரிய தீர்வைப் பெற்றுக் கொடுக்கப் போவதில்லை. என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் யாழ்ப்பாணம் சுண்டுக்குழி பகுதியில் இடம்பெற்றிருந்தது.
இதன்போது உரையாற்றுகையில் , கஜேந்திரகுமார் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த கால அரசாங்கத்தில் இணைந்து கொண்டிருந்தபோதும் தமிழ் மக்களுக்கு எதையும் செய்யவில்லை. அவர்கள் ஒற்றையாட்சியை ஏற்றுக் கொண்டவர்களாகவே காணப்படுகின்றார்கள்.

இவர்களால் தமிழ் மக்களுக்கு எந்தவிதப் பிரயோசனமும் இல்லை. இவர்கள் தற்பொழுது கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்திடம் ஒப்பந்தம் ஒன்றை செய்து ள்ளார்கள். இவர்களின் இந்தச் செயல்பாடானது தமிழ் மக்களுக்கு உரிய தீர்வை ஒரு போதும் பெற்றுக் கொடுக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

இவர்கள் அரசாங்கத்துடன் சேர்ந்து செயற்படுபவர்களாகவே உள்ளனர்.

எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இம்முறை எவரும் வாக்களிக்கக்கூடாது. கூட்டமைப்புக்கு இம்முறை எவராவது வாக்களித்தீர்களாக இருந்தால் அது இனத்துக்குச் செய்யும் துரோகமாகும் “என்றார்