தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசியப்பட்டியல் ஆசனத்தை, கட்சியின் செயலாளர் செ.கஜேந்திரனுக்கு வழங்குவதென முடிவாகியுள்ளது.
கட்சியின் மத்தியகுழு நேற்று இரவு கட்சியின் தலைமை செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஏக மனதாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கட்சியின் மத்தியகுழுவில் 5 பேர் அங்கம் வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.