தமிழ் அரசியல் கைதிகள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை என்றும், பொதுமன்னிப்பின் கீழ், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தெரிவித்தார்.
இடைக்கால கணக்கு அறிக்கை மீதான இன்றைய இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர்ந்தும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அரசாங்கம் இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால்,அவர்களுக்குச் சர்வதேச விசாரணை ஒன்று தீர்வாக அமையும். இதில் நாம் உறுதியாக இருக்கிறோம். இதற்காகவே மக்கள் எங்களுக்கு வாக்களித்தனர்” எனவும் தெரிவித்தார்.