விஜயகலாவிடம் 5 மணிநேர விசாரணை!

108

ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான விஜயகலா மகேஸ்வரனிடம் சுமார் 5 மணிநேர விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

அரசியல் பழிவாங்கல்கள் குறித்து விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் அவர் இன்று காலை ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்த ஞானலிங்கம் மயூரன் என்கிற நபரது முறைப்பாட்டிற்கு அமைய அவரிடம் இன்றைய தினம் விசாரணை நடத்தப்பட்டது.

தான் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டமைக்கு விஜயகலா மகேஸ்வரனின் தலையீடுகள் இருந்திருந்ததாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்தே மேற்படி விஜயகலா மகேஸ்வரனிடமும் அதேபோல, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தராகிய ஞானலிங்கம் மயூரனிடமும் 05 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது.