போதைபொருள் கடத்திய கழுகு கைது

113

பாதாளக் குழு ஒன்றின் தலைவராக கருதப்படும் அங்கொட லொக்காவினால், போதைப்பொருள் விநியோகத்திற்கு பயிற்சியளிக்கப்பட்ட கழுகு ஒன்று நேற்று (30) மீட்கப்பட்ட நிலையில் ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த கழுகு, அத்துருகிரிய பொலிஸ் நிலைய அதிகாரிகளினால் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

மேல்மாகாண புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மீகொட- நாவலமுல்ல மயான வீதி பிரதேசத்திலுள்ள அங்கொட லொக்காவுடன் நெருங்கிய நண்பரின் விலங்கு பண்ணையிலிருந்து பொலிஸாரால் குறித்த கழுகு மீட்கப்பட்டது.

‘குச எலி முதுது உகுஸ்ஸா’ என அழைக்கப்படும் குறித்த கடல் கழுகு, சுமார் 15 கிலோகிராம் பாரத்தை சுமந்து செல்லும் ஆற்றல் கொண்டதாக கருதப்படுகின்றது.

இவ்வகையான கழுகுகளுக்கு, உத்தரவுகளுக்கு அமைய வேலை செய்வதற்கான பயிற்சி அளிக்க முடியும் என, வனஜீவராசி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.