வடமாகாணத்தின் கல்வி தரம் ?

107

கல்வி தரம் வீழ்ச்சி!! வெளிப்படையாக என் மனதுக்குப்பட்டதை சொல்வதென்றால் இது பைத்திய காரக்கதை! உங்கட யாழ்ப்பாண வடமாகாண வீணாப்போன பழமை வாத கண்களோட பார்த்தால் அப்படித்தான் தெரியும் எல்லாம்…
ஆனால் என்னைப்பொறுத்தவரையில் இப்போதைய பிள்ளைகள்
இங்க குறைஞ்சுபோச்சு என்று முதலைக்கண்ணீர் விடுறவையை விட ஒப்பீட்டளவில் முதிர்ச்சியும் ஆளுமையும் நிறைந்த பிள்ளைகள்தான்!! பிள்ளைகள்
நீர்போன்றவர்களே அவர்கள் எந்த பாத்திரத்தில் நிரப்ப படுகிறார்களோ அந்த பாத்திரத்தின் வடிவங்களையே எடுப்பார்கள்.. மாணவர்களை குறைகூறுவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது..

இங்கே பலர் பல காரணங்களை பட்டியலிடுகிறார்கள்! எனக்கு சிரிப்பு என்னவென்றால் அந்த பட்டியல்கள் பிரதிபலிக்கின்றன அவர்களின் உள்ளத்தில் இருக்கும் விசயங்களும், அவர்களின் அறிவு மட்டங்களும்!
அவர்கள்கூறும் காரணங்களில் 99 வீதம் அதிகமுள்ள கொழும்பும் கொழும்பை அண்டிய பிரதேசங்களினதும் பெறுபேறுகள் இப்போ எப்படி முன்னிலையில் உள்ளன?

மாறாக இந்த சாதாரண தர பரீட்சைகளில் பெறுபேறுகளை வைத்து குழந்தைகளின் அறிவு மட்டத்தை அளவிடாதீர்கள்.. முன்பு போல இல்லை! முன்பு போல இல்லை என்று அந்த முன்பு வந்தவர்களும் உங்கள் கல்வி அளவுகோல்களும் செய்தவை என்ன? படித்து பட்டம் பெற்றுவிட்டு வந்து வேலைபெறுவதற்கு ஆர்ப்பாட்டம்
செய்யும் ஒரு கூட்டத்தைதானே! தமக்கான உண்மையான தலைமைத்துவத்தை அடையாளம் காணத்தெரியாத அப்படி இல்லை என்றால் இருப்போரை புறந்தள்ளிவிட்டு தாம் அந்த இடத்தை ஆளுமையாளராக நிறப்ப தெரியாத வெறும் மட்டை பட்டங்களைத்தானே!

ஆனால் இன்றைய பிள்ளைகள் அப்படி இல்லை. தமது கற்றலின் நோக்கம் உங்களைவிட அவர்களால் நன்றாக புரியப்பட்டுள்ளது. உங்களுக்கு உங்கள் கல்விமேல் உங்கள் பெற்றோர் காட்டிய அக்கறையைவிட பலபடிமேலே இப்போதைய பெற்றோர் தமது குழந்தைகளின் கல்விமேல் அக்கறையும் அர்ப்பணிப்பும் கொண்டுள்ளனர்.

இன்றைய பிள்ளைகள் உங்களைப்போல நல்ல ஒரு பிரச்சினையும் இல்லாத நல்ல வருமானம்தாற வேலைகளை பெற படிப்பவர்கள் அல்ல அவர்கள் சர்வதேச நடைமுறைகளையும், அதன்போக்கையும் அவதானித்து தமது அறிவை விரிவு செய்வதற்காக கற்பவர்கள், பலபேருக்கு தாம் வேலை கொடுக்கும் வேலைகளுக்காக கற்பவர்கள், வெறும் சாதாரண தர பரீட்சையில் உங்கள் ஒன்றுக்கும் உதவாத யாழ்ப்பாண பழமைவாத கல்வி அணுகுமறை ஊனக்கண்களால் அவர்களை ஒருவித பரிசகிப்பு வேண்டாம்.

எனக்கு இப்போதைய எங்கள் குழந்தைகள் மீது நிறைய நம்பிக்கை இருக்கிறது. இன்னும் 15 வருடங்களில் எல்லாம் அவர்களின் கைகளில் வரவேண்டும் என்பதே எனது அவாவும்கூட..
அவர்கள் சரியாக ஓடுகின்ற நதிகள்
அவர்களையும் வெறும் உங்கள் பாழாய்ப்போன அளவுகோல்களை தடைக்கல்லாக பாவித்து அவர்களின் போக்கை தடுக்காதீர்கள்.. இது வெறும் சாதாரண தரம் தான்!

– ஜனார்த்தனன்