தேசிய தலைவரால் தமிழ் தேசிய உரிமைக்காக உருவாக்கப்பட்டவர்களே கஜேந்திரகுமார், கஜேந்திரன் – காண்டீபன்!

164

தமிழ் தேசிய மக்கள் முன்னணியை நீங்கள் ஏன் ஆதரிக்க வேண்டும்? நீங்கள் ஆதரிப்பதற்கான ஒரே ஒரு அடிப்படைக் காரணம் கடந்த பத்து வருடங்களாக உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் தேசியத்திற்காக உழைக்கின்ற ஒரு கட்சியாக காணப்க்கின்றது. இந்த விடுதலைப் போராட்டத்தின் தொடர்ச்சியாகவும் நீட்ச்சியாகவும் விடுதலை போராட்டத்தின் வீரத்தையும் தியாகத்தையும் கொண்டு செல்கின்ற ஒரே ஒரு அமைப்பே தமிழ் தேசிய மக்கள் முன்னணியே ஆகும்.

வல்வெட்டித்துறையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை(30.07.2020)அன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலேயே முன்னணியின் வேட்பாளரும் சட்டத்தரணியுமாகிய நடராஜா காண்டீபன் அவர்கள் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்…

இலங்கையில் தமிழினத்துக்கு எதிராக சிங்கள பௌத்த பேரினவாதம் இனப்படுகொலை நடத்தியுள்ளது என்பதனை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால் கடந்த காலத்தில் தாங்கள்தான் தமிழ் தலைமைகள் என்று சொல்லிக் கொண்டிருந்த தமிழ் தலைமைகள் சரியான முறையில் கையாளத் தெரியாதவர்களும் பேசத் தகுதி இல்லாதவர்களாலும் கடந்த 10 வருடங்களாக ஏற்பட்ட நிலைமையே இதற்கு காரணமாகும்.

தமிழ் தேசிய கொள்கையுடன் பயணிக்கின்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தையும் செல்வராஜா கஜேந்திரனையும் இந்த வடமராட்சி மண்தான் எமக்கு தந்துள்ளது. வீரம் செறிந்தஅந்த விடுதலைப் போராட்ட காலத்திலே எமது கட்சியின் தலைவர் கஜேந்திரகுமாரை விடுதலை புலிகளின் தேசிய தலைவர் நேரடியாக கையாளுகின்ற விடயங்களை தேசிய தலைவர் பிரபாகரன் அவர்கள் கஜேந்திரகுமாருடன் அணுகி நான்கு மணித்தியாலங்கள் நெருங்கி உரையாடிய இருக்கின்றார். சர்வதேசத்தை கையாளுகின்ற விடயத்தினை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இருந்த போதும் கஜேந்திரகுமார் இடம் அந்தப் பொறுப்பினை தலைவர் ஒப்படைத்திருந்தார்.

உங்களுக்கு தெரியும் தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு விடயத்தை கையாளுகிற விதம் அவர்கள் உறுதியாக நம்பக்கூடிய அவர்களிடம் மட்டுமே தமது பொறுப்புகளையும் விடயங்களையும் கையாளுவது வழமையான விடையம். எனவே அந்த காலகட்டத்தில் கூட தலைவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை நம்பாது அந்த பொறுப்பினை கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் ஒப்படைத்திருந்தார்.

அதேபோன்று அன்றைய காலகட்டத்தில் யாழ் பல்கலைக்கழகத்தில் விடுதலை சார்ந்த அரசியல் கருத்துக்களைஅந்த காலகட்டத்தில் இருந்த மாணவர்களுக்கு கொண்டு செல்ல முடியாத நிலைமையில். அன்றைய மாணவனாக இருந்த செல்வராஜா கஜேந்திரன் அன்றைய காலத்தில் சிங்கள ராணுவ அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் விடுதலை போராட்டத்தின் அரசியல் கருத்துக்களை அங்குள்ள மாணவர்களுக்கு உட்புகுத்தி பொங்கு தமிழ் எழுச்சி எனும் பெரும் சாதனையை நிகழ்த்தியிருந்தார்.

அதனடிப்படையிலேயே விடுதலைப்புலிகளின் தலைவர் சர்வதேச தமிழீழ மாணவர் பேரவை தலைவராக கஜேந்திரனை நியமித்திருந்தார்.

பத்து வருடங்களுக்கு முன்பாகவே அந்த தலைமைக்குத் தெரியும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த இனத்துக்கு துரோகம் இழைக்கும் என்று அதனாலேயே அன்றைய தலைமையினால் உருவாக்கப்பட்டவர்கள் தான் இந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராஜா கஜேந்திரன் ஆகிய இவர்கள்.

முள்ளிவாய்க்கால் மௌனித்த பின் அதே கொள்கையுடன் பயணிக்கின்ற ஒரு கட்சியாகவே நாம் தோற்றம் பெற்று நிற்கின்றோம் எனவே அன்றைய காலகட்டத்திலேயே தலைவரின் தூரநோக்கு சிந்தனையுடன் பார்க்கப்பட்டர்கள் நான்கள்.

எனவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் துரோகத்தனத்திற்கு நீங்கள் துணை போவீர்களா இருந்தால், தமிழ் தேசிய வாத கொள்கைக்கு துரோகம் இழைப்பவர்களாகவே இந்த மண்ணில் இருப்பீர்கள். எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்காது தமிழ் தேசியக் கொள்கையுடன் பயணிக்கும் எங்களுக்கு நீங்கள் வாக்களிப்பதன் மூலமே சர்வதேச சமூகமுடாக எம் மக்களுக்கான ஒரு நீதியினை பெற்றுக்கொள்ளமுடியும் என அவர் தெரிவித்திருந்தார்.