திட்டமிட்டபடி நாளை போராட்டம் – தமிழ்த் தேசியக் கட்சிகள் அறிவிப்பு!

80

திட்டமிட்டபடி உண்ணாநிலைப் போராட்டம் நாளை நடைபெறும் என்று தமிழ்த் தேசியக் கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன.

தியாகிதிலீபன் நினைவேந்தலை முன்னெடுப்பதற்கு யாழ்ப்பாணம் நீதிமன்றம் தடை உத்தரவு வழங்கியிருந்த நிலையில் சந்நிதி ஆலய முன்றலில் உண்ணாவிரதப் போராட்டம் நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று காங்கேசன்துறைப் பொலிஸார் மேற்கொண்ட மனுத் தாக்கலை அடுத்து அங்கு போராட்டம் நடத்த முடியாது என்று பருதித்துறை நீதிமன்றம் தடை உத்தரவு வழங்கியது.

இந்நிலையில் சற்று முன்னர்,

யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள சி.வி.கே.சிவஞானத்தின் இல்லத்தில் ஊடகங்களைச் சந்தித்த தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் சார்பில் சட்டத்தரணி சிறீகாந்தா ஊடகங்களைச் சந்தித்தார்,

நாளை திட்டமிட்ட படி போராட்டம் நடைபெறும் என்று அவர் தெரிவித்திருந்த போதிலும் எங்கு நடைபெறும் என்ற விடயத்தினை வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.