“கந்தன் பாதம் கனவிலும் காக்கும்”

484

முருகப்பெருமானுக்கு “முருகன்” என பெயர் பெற்றதற்கு என்ன காரணம் என சிலர் தெரிந்திருக்கக் கூடும், தெரியாதவர்களுக்காய் இப் பதிவு, முருகு என்றால் அழகு என்பார்கள். இந்த சொல்லுக்கு இளமை, அழகு, மணம், கடவுள் தன்மை, தேன் என்று பல பொருள்களும் இருக்கிறது, ஆதலால் முருகன் மாறாத இளமையும், அழியாத அழகும், குறையாத நறுமமும் நிறைந்த தெய்வத்தன்மையும், தெவிட்டாத இனிமையும் உடையவன் என்று பொருள் கொண்டு நிற்கிறது.

மெல்லின, இடையின, வல்லின மெய் எழுத்துக்களுடன் “உ” எனும் உயிரெழுத்து
ஒவ்வொன்றுடனும் சேர்ந்து முருகு என்றாயிற்று. இம் மூன்றும் இச்சா சக்தி, கிரியா சக்தி,
ஞான சக்தி இவைகளைக் குறிக்கும் என்றும் சொல்கிறார்கள்.

அது போல சண்முகப்பெருமான் குறித்து சில பழமொழிகளையும் அறிந்திருப்போம், ஆனாலும் அறியாத தெரியாத சில பழமொழிகள் இவை

“வேலை வணங்குவதே வேலை”

“சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை,
சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமில்லை”

வயலூர் இருக்க அயலூர் தேவையா?

“காசுக்குக் கம்பன் கருணைக்கு அருணகிரி”

“அப்பனைப் பாடிய வாயால் – ஆண்டிச் சுப்பனைப் பாடுவேனா?”

“முருகனுக்கு மிஞ்சிய தெய்வமில்லை,
மிளகுக்கு மிஞ்சிய மருத்துவம் இல்லை”

“சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்”
( சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும் )

“கந்தபுராணத்தில் இல்லாதது எந்த புராணத்திலும் இல்லை”

“கந்தன் களவுக்குக் கணபதி சாட்சியாம்”

“பழனி பழனின்னா பஞ்சாமிர்தம் வந்திடுமா?”

“சென்னிமலை சிவன்மலை
சேர்ந்ததோர் பழனிமலை”

“செந்தில் நமக்கிருக்கச்
சொந்தம் நமக்கெதற்கு?”

“திருத்தணி முருகன் வழித்துணை
வருவான் வேலனுக்கு ஆனை சாட்சி”

“வேலிருக்க வினையுமில்லை,
மயிலிருக்கப் பயமுமில்லை”

“செட்டிக் கப்பலுக்குச் செந்தூரான் துணை”

“கந்தன் பாதம் கனவிலும் காக்கும்”

போன்ற பழ மொழிகள் எப்போதும் எம்மோடு கந்தன் நினைவுகள் அழியாது துணையிருக்க, கலியுகத்தில் இடரிலிருத்து எமைக் காக்க என்றும் உதவிடும் என்பதில் அச்சமில்லை.

“முத்தமிழால் வைதாரையும் வாழவைப்பான் முருகன்” – அருணகிரிநாதர்

#kanthasasti #murugan