கொரானா காலத்தை பயன்படுத்தி நான்கு பிள்ளை பெற கருணா கொடுத்த ஐடியா…

1079

தேர்தல் கூட்டமொன்றில் பங்குபற்றிய கருணா,கொரானா காலத்தை பயன்படுத்தி கிழக்கு தமிழர்கள் நான்கு பிள்ளைகளை பெற்று கொள்ளுமாறு அறிவுரை வழங்கியுள்ளார்.தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகப்படுத்தி தமிழர்கள் உரிமையை வென்றெடுக்க போதிய தமிழர்கள் சனதொகை இல்லை என்றும்,இதனால் தமிழர்களின் வளங்கள் பறிபோவதுடன்,அவற்றை தடுக்கமுடியாமல் இருக்கின்றது என்றும்..எல்லா பிரச்சினைகளுக்கும் முடிவு காண,தமிழர்கள் வீட்டிற்கு நான்கு பிள்ளைகளை பெற்று கொள்ள வேண்டும் என்று கருணா ஐடியா கொடுத்துள்ளார்.ஒரு பிள்ளைக்கு பத்து மாசம் என்று பார்த்தால்,நான்கு பிள்ளைக்கு மூன்று வருசத்துக்கு மேல் தேவை,அப்படி என்றால் கருணா குறிப்பிட்ட நான்கு பிள்ளை பெறுதல் ஒரு மனைவியிடம் இல்லை என்றாகின்றது,நான்கு மனைவி இருக்கும் போதே நான்கு பிள்ளைகள் கொரானா காலத்தில் பெறும் சாத்தியம் உள்ளது.கருணாவின் கணக்குப்படி,அவருக்கு கிடைத்தது போல எல்லோருக்கும் இலவசமாக நான்கு மனைவிகள் கிடைப்பார்களா? இல்லை அதற்கு எதாவது ஏற்பாடு செய்யும் தொழில் தொடங்கியுள்ளாரா என்று தெரியவில்லை..

முஸ்லீம் அமைச்சர்கள்,அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்பை பேணிவரும் கருணாவுக்கு,கிழக்கில் தமிழர்களுக்கு எதிரான முஸ்லீம்களின் அடக்குமுறைகள் அநீதிகள் பற்றியும் அவற்றின் தொடர்ச்சிகள் எவ்வாறு வேருன்றுகின்றது என்று நன்றாகவே தெரியும்,தனது அரசியலை நடத்துவதற்காக கிழக்கில் பிரச்சினைகளை இன்னும் தூண்டிவிடுவதுடன்,தமிழர்களுக்கு எதிராக முஸ்லீம்களையும் தூண்டும்,தொடர்ந்து எதிர்த்தரப்பில் வைத்திருக்க நினைக்கும் கோட்டா அரசில் அங்க வகிக்க,நாயாக அலைந்து திரியும் கருணா,கிழக்கு தமிழர்களை பார்த்து வாக்குக்காக முதலை கண்ணீர் வடிப்பதும்,ஏதுமறியாத கிழக்கு மக்கள்,முஸ்லீம் சிங்கள அடக்குமுறைகளினால் சொல்லெனா துன்பங்கள் அனுபவிக்கும் அவர்களுக்கு இவர்களும் பெரும் தலையிடியாக இருப்பது பெரும் கொடுமை..