கைதாகிறாரா ஒட்டு குழு கருணா

64

கருணா ஆயிரகணக்கான சிங்கள இராணுவத்தை ஒரே இரவில் கொன்றதாக தேர்தல் கூட்டத்தில் தெரிவித்த கருத்து தொடர்பில் சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவு!

விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்த கருத்து தொடர்பில் சி.ஐ.டி விசாரணை ஆரம்பிக்கவுள்ளது.பதில் பொலிஸ்மா அதிபர் இதற்கான உத்தரவை இட்டுள்ளார்.

ஒரு இரவில் இரண்டாயிரம், மூவாயிரம் இராணுவத்தினரை ஆனையிறவில் தாம் கொன்றதாக கருணா அண்மையில் தெரிவித்திருந்த கருத்து, தென்னிலங்கையில் பூதாகரமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.பல்வேறு சிங்கள இனவாத தரப்பினரும் தமது நஞ்சை கக்க தொடங்கியுள்ளனர்.கருணாவுக்கு சிங்கள தரப்பில் கொடுக்கப்பட்ட அமைச்சு பதவிகள் எல்லாமே புடுங்கப்பட்டு இந்த தேர்தலிலே இறுதி தேர்தலாக இருக்கும் என்ற நிலையில்,எப்படியாவதை தேர்தலை வென்று விட வேண்டுமென நினைப்பில் அவர் தமிழர்களை உசுபேத்த சொன்ன கதை,இன்று அவருக்கே எமனாகியுள்ளது.தமிழருக்கு குழி தோண்டும் போதே கருணா,அவருக்கான குழியும் அதன் பக்கத்தில் தோண்டியே வைக்கப்பட்டிருந்தது. தற்போது இறுதி நாட்களை எண்ணி கொண்டுள்ளார்.விரைவில் காணாமல் போவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

எனினும் கருணா,தனது இறுதி காலத்தில் சிங்கள இனவாதத்துக்கு எண்ணெய் ஊற்றி தமிழர் மேல் ஏவி விட்டு அதன் மூலம் வாக்குகளை அள்ளலாம் என்ற திட்டத்தை வைத்திருந்திருக்கலாம்.எனினும் சிங்களவர்கள் தெளிவாக இருப்பதால்.அவர்கள் கருணாவை கவனிக்க தொடங்கிவிட்டனர்.கொரானாவை விட கொடியவன் என்று கருணாவே சொல்லிவிட்டதால்,இனி அவரை தனிமைப்படுத்தலுக்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே சிங்கள அரசின் உத்தரவாக இருக்கும்.