வாழ்வா? சாவா? தீவிர மன உளைச்சலில் கருணா,மனைவி-மகள் மஹிந்தவிடம் இறுதி தூது

164

முன்னாள் சிங்கள ஏவல் அமைச்சரும்,ஒட்டுபடை தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரனின் மனைவியும் மகளும் இணைந்து சிங்கள இனபடுகொலையாளி மகிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளனர்.

வழமையாக கருணாவுடன் இணைந்து சந்திப்புக்களை நடாத்தி வந்த கருணா மனைவி இம்முறை தனியாக சென்று இனவாதி மஹிந்தவை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏன் கருணா செல்ல வில்லை என்கின்ற வினா பரவலாக எழுந்துள்ளமை,குறிப்பிடத்தக்கது.வாழ்வா சாவா என்ற உச்சகட்ட மனவிரக்தியில் மஹிந்தவை நேரில் சந்திக்க விரும்பாமல்,மனைவி மகளை அரசியல் தூதாக மஹிந்தவிடம் அனுப்பியுள்ளார்.

மகிந்தவும் சிங்கள இனவாத தரப்பும் தன்னை போருக்கு பயன்படுத்திவிட்டு தற்போது தூக்கி எறிந்துவிட்டதாக புலம்பி திரியும் கருணா,தான் இனவிடுதலை போரை காட்டி கொடுத்த அளவுக்கு சிங்கள இனவாதம் அரசு தனக்கு எதுவும் தான் எதிர்பார்த்தளவு நன்மைகள் செய்யவில்லை என்றும்,தன்னை கறிவேப்பிலை போன்று தூக்கி எறிந்துவிட்டதாகவும் தனக்கு நெருக்கமான வட்டாரத்தில் தண்ணியை போட்டுவிட்டு புலம்பியுள்ளார்.மேலும் தனக்கு பிரதியமைச்சர் பதவி ஒன்றாவது கொடுத்து அழகு பார்த்திருக்கலாம்.விடுதலை புலிகளை தான் இல்லை என்றால் இவர்களால் தொட்டு பார்த்திருக்க முடியுமா? அவ்வளவு பெரிய வேலையை என் உயிரையும் பணயம் வைத்து இவர்களுக்கு செய்து கொடுத்தேன் என்றுள்ளார்.இது குறித்து மஹிந்த தரப்பில் வினவிய போது,அவர் இப்போது உயிருடனும் ஜெயில் கம்பிக்கும் வெளியில் இருப்பதுமே பெரிய விடயம்,அதை நினைத்து அவர் மீதி வாழ்க்கையை சந்தோசமாக வாழ வேண்டும் என்று நக்கலாக சொல்லி சிரித்தனர்.துரோகி கருணாவுக்கு காலம் கடந்து கர்மா தனது வேலையை காட்ட தொடங்கியுள்ளது.இன்னும் அனுபவிக்க நிறைய இருக்கின்றது என்று தமிழ் உணர்வாளர்கள் மகிழ்ச்சி