யாழில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி அதிகரிப்பு – குடிமக்கள் மகிழ்ச்சி – சிறிதரன் அதிர்ச்சி

54

கோப்பாய், குப்பிளாவத்தையில் சட்டத்துக்குப் புறம்பான கசிப்பு உற்பத்தி செய்யப்படும் இடம் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டது. சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

அங்கு 45 லீற்றர் கசிப்பு, 150 லீற்றர் கோடா மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும் மீட்கப்பட்டன என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோப்பாய், சாவகச்சேரி, வட்டுக்கோட்டை மற்றும் அச்சுவேலி பொலிஸ் பிரிவுகளில் கசிப்பு உற்பத்தி பெரியளவில் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்க குடிச்சாலும் சாகதான் போகிறார்கள்.ஆனால் இவர்களாக செய்து குடிக்க ஆரம்பித்துவிட்டால்,பின்னர் மதுபான கடைகளை தேடி யாரும் போகமாட்டார் என்ற வியாபார அக்கறையில்தான் இவற்றை ஏவல்துறைகள் செய்வார்கள்,ஆனால் வெளியில் ஏதோ சமூக பொறுப்பு இருப்பது போன்று காட்டப்படும்,தவிர கசிப்பால் மக்கள் சாகிறார்கள் என்று மதுபான கடைகளை புதிதாக கட்ட நாடாளுமன்றத்தில் அனுமதி கேட்ட கிளிநொச்சி சிறிதரனும் அவரின் 70000 ஆயிரம் குடிமக வாக்காளர்களும் வாழும் தேசம் இது