விமானங்களை அழித்து விடைபெற்ற பெரும் மறவர்கள்…

225

ஜூலை 24 2001..

கட்டுநாயக்க விமான படைத்தளமும் அதனை சுற்றியுள்ள பகுதிகளும் ஆழ்ந்த அமைதியிலும் அதிகாலைத்தூக்கத்திலும் இருந்தது.

அதிகாலை 3.30 மணிக்கு,கிழக்காசிய நாடொன்றிற்கு செல்லும் பயணிகள் விமானமும் கிளம்பிச்செல்கின்றது. தமிழர்களின் போராட்ட வரலற்றின் உச்சவீரம் வெளிப்பட்ட அந்தக்கணமும் வந்துசேர்கின்றது.

நீண்ட , உறுதியான பலனாய்வுத்தகவல்களின் உதவியுடனும், நெஞ்சில் நிறைந்த வீரத்துடனும் 14 கரும்புலி வீரர்கள் கட்டுநயாக்க விமானப்படைத்தளத்தின் மீது அழித்தொழிப்பு தாக்குதலை ஆரம்பிக்கின்றனர்..

தமிழர் பிரதேசங்களில் குண்டுமழை பொழிந்து, தமிழனின் குருதியினை சுவைத்த , எம்மின அவலத்தை ரசித்த இயந்திரப்பறவைகள் ஒவ்வொன்றாக தீப்பற்றி எரிய ஆரம்பித்தன.

நாதியற்ற மக்களின் மீது ஈவு இரக்கமற்ற தாக்குதலை நடாத்திய சிங்களத்தின் வான் கலங்கள் எரியும் ஒலி , இதே வான் கலங்களால் மரணித்துப் போன ஒவ்வொரு தமிழனின் ஆன்மாவையும் நிச்சயம் எட்டியருக்கும்.

மிகப் பெரும் இழப்பையும், பொருளாதார தேக்கநிலையினையும் சிங்களத்திற்கு ஏற்படுத்திய இவ் வீரமிகு தாக்குதல் 08.30 மணியளவில் முடிவிற்கு வந்தது.

தம்மால் முடிந்த உச்சபட்ச இழப்பை எதிரிக்கு ஏற்படுத்திய வீரமறவர்கள் புலிக்கொடி போர்த்திய படியே வித்தாகிப்போனார்கள்.

உண்மையிலேயே புலிகளின் மேல் சர்வதேசமும், இந்தியாவும் அச்சம் கொண்ட தாக்குதல் இதுதான்.

புலிகளை இல்லாதொழிக்க வேண்டும் என்னும் சதிக்கான ஆரம்புள்ளியும் இங்கு ஆரம்பித்திருக்கலாம்.

உலக போர் ஆவணங்களில் இத் தாக்குதல் புறக்கணிக்கப்படலாம்.

வெள்ளை இனத்தவர்களின் வீரத்தை மட்டுமே போற்றும் உலக ஒழுங்கு இத் தாக்குதலை புறம் தள்ளலாம்.

ஆயினும்,

ஒவ்வொரு தமிழனின் நெஞ்சிலும் நீக்கமற நிறைந்த இவ் வெற்றி தமிழினத்தின் இறுதிநாள் வரை நிலைத்திருக்கும்.

விதையாகி போன வீர மறவர்களுக்கு வீர வணக்கங்கள்.!

அன்பரசன் நடராஜா