கொரோனா கட்டுப்பாட்டுக்களை மீறி இரகசிய விருந்தினை ஏற்பாடு செய்திருந்தவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
Santeny (Val-de-Marne) நகரில் இந்த விருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. இரவு நேர ஊரங்கினை மீறி இந்த இரகசிய விருந்து விழா இடம்பெற்றுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற Direction de la Sécurité de Proximity de l’Agglomération Parisienne அதிகாரிகள், விருந்தை இடையில் நிறுத்தினர்.
விருந்தில் ஐம்பது பேர் வரை கலந்துகொண்டிருந்துள்ளனர். அவர்களில் முகக்கவசம் அணியாத பலருக்கு தண்டப்பணம் அறவிடப்பட்டிருந்தது. மேலும் விருந்தினை ஏற்பாடு செய்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுபோன்ற இரசிக விருந்துகள் கடந்த சில வாரங்களாக பரிஸ் மற்றும் அதன் புறநகர்களில் இடம்பெற்று வருகின்றமையும், காவல்துறையினர் தலையிட்டு அவற்றை தடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தகது.