சில நேரங்களில் சில மனிதர்கள்…

97

1997 அல்லது 1998 ஆம் ஆண்டு இருக்கலாம். இரவு நிகழ்வுகளைப் படம் பிடித்துக் காட்டும் ‘ஆந்தை’ என்ற பகுதியில், ஜூனியர் விகடன் ஒரு கட்டுரை வெளியிட்டது. திருவான்மியூரில் நள்ளிரவு நேரத்தில் ஒரு கார் செல்கிறது. காரில் செல்பவர் ஒரு பெண் மருத்துவர். தனது மகப்பேறு மருத்துவ மனையில் ஒரு பிள்ளைப் பேறு பார்த்துவிட்டு தனது வீடு நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறார். இரண்டு காவலர்கள் வழி மறித்து பணம் கேட்கின்றனர். அவர்கள் குடித்திருக்கின்றனர். அந்த மருத்துவர் சொன்ன எந்த விளக்கத்தையும் அவர்கள் கேட்க மறுக்கின்றனர். பணம் தராவிட்டால் விபச்சார வழக்கு போடுவோம் என்று மிரட்டுகிறார்கள்.

அந்த மருத்துவர் தனது அலைபேசியில் ஒரு எண்ணை அழைக்கிறார். அது அந்தப் பகுதி ரௌடி ஒருவரின் அலைபேசியாகும். அவர் தனது ஆட்கள் இருவரை அனுப்பி அந்தக் காவலர்களை மிரட்டி விரட்டி விட்டு அந்த மருத்துவரை பாதுகாபாக அனுப்பிவைக்கிறார்.

அந்த ரௌடியை அந்தப் பெண் மருத்துவருக்கு எப்படித் தெரியும்?

சில நாட்களுக்கு முன்னர்தான் அந்த ரௌடியுடைய மனைவிக்கு அந்தப் பெண் மருத்துவர்தான் பிரசவம் பார்த்திருக்கிறார்.

காவலர் வேலை அன்று ரௌடியால் செய்யப்பட்டது.

There is no scope for redemption of the nation unless the recommendations of the Dharam Veer Committee on police reforms are implemented and the Police Commission established in every state, with the power of day to day monitoring by the Commission that includes the Home MInister, Leader of Opposition, a sitting Judge of the High Court and the DGP of the respective state.

Nata Rajan

இந்த பதிவை செய்தவர் நண்பர். மூத்த வழக்கறிஞர்.

பொத்தாம் பொதுவாக ஒரு துறையை அப்படியே காயப்படுத்துவது தவறு….

அதே 1998 ஆம் ஆண்டு

எனது ஏழை கட்சிக்காரரின் மகளுக்கு சென்னை MMC மில் மருத்துவ சீட் கிடைத்து இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அவரது சீனியர் மாணவர் ஒருவர் ரௌடியின் உறவினராம்.

அவனால் இந்தப் பெண்ணுக்கு தினமும் காதல் என்கிற பெயரில் டார்ச்சர்.

ஒருகட்டத்தில் அந்தப்பெண் படிப்பே வேண்டாம் என்று நின்றுவிட்டார்.

அந்தப் பெண்ணின் தந்தை எனது உதவியை வேண்டினார்

புகார் கொடுத்தால் விவகாரம் பெரிதாகும். பாதிப்பு பெண்ணுக்குதான்.

ஆகவே நிதானமாக யோசித்து அந்தப் பெண் அவரது தந்தை ஆகியோருடன் அந்தப் பகுதி உதவி காவல்துறை கண்காணிப்பாளர் அவரிடம் சென்று முறையிட்டேன்.

முழுமையாக நிதானமாக கேட்டார்.

எழுத்துப்பூர்வமாக எந்தப் புகாரும் தரவில்லை.

கா.து.க. அந்தப் பெண்ணிடம் சொன்னார் இனி தைரியமாக போய் படிம்மா…ஒன்றும் ஆகாது என்றார்.

அவர் சொன்னது போல அந்தப் பெண் படித்து முடிக்கும்வரை அவனால் மட்டுமல்ல வேறு யாராலும் எந்தத் தொந்தரவும் வரவில்லை.

இன்று அந்த ஏழைப் பெண் அதே சென்னையில் அரசு மருத்துவமனை கல்லூரி ஒன்றில் புகழ்பெற்ற மருத்துவராக விளங்குகிறார். கணவரும் மருத்துவர் என்பதால் இன்று பெரும் செல்வந்தரும்கூட…

இன்றும் எதாவது நோய் குறித்து ஐயம் கேட்க அந்த மருத்துவரை அலைபேசியில் அழைக்கும் போது நன்றி மறவாமல் “வக்கீல் சார் இன்று உங்களால்தான் நான் டாக்டராக உள்ளேன்” என்று சொல்லித்தான் பேச்சை முடிப்பார்.

நான் அந்த காவல்துறை துணை கண்காணிப்பாளரை நினைத்துக் கொள்வேன்.

நன்றி – Palani deepan