பேய்த்தாய்மை…

70

அம்மா சயனிகா! ஒரு

ஆறு அல்லது ஏழு

வயதிருக்குமா உனக்கு

சாய்ந்தாடம்மா சாய்ந்தாடம்மா

என பெற்றவர் தோழில்

ஊஞ்சலாடும் பருவம்.

சிவப்புச் சட்டையில்

இன்று பூத்த ரோஜாபோல்

புன்னகைப் படம்…

நீ செங்குருதியில்

தோய்ந்த படமாய்

எம் கண்களுக்கு

செய்தியாய்

வந்ததம்மா…

சுமந்து பெற்று

பாலூட்டித் தாலாட்டிய

தாய்க் கரமே உன்னைக்

குத்திக்கொன்ற கொரூரம்

எப்படி ஆனது..

பசியால் வந்த மரணம்

நல்லதங்காள்

தன் பிள்ளைகளை

பாழும் கிணற்றில் தள்ளியது.

பசி தெரியா மண்ணில்

இது

வசதியால்

வசதியாய்

வந்த மரணமா!

இறைவன் அவதாரமான

அன்னைக்கு

மண்ணில்

இப்படியும் அவதாரமா..

மண்ணில் புதைந்த

எம் தேசப் புதல்வருக்காய்

சிவப்புக்கொடி தாங்கி

நின்ற உன்னை

செங்குருதியில்

நனைத்து

பாடையேற்றி

விட்டதே ஒரு #பேய்த்தாய்மை.

நன்றி – Sriskandarajah