கிளிநொச்சியில் பெண் தலைமைத்துவ பெண்போராளிகளுக்கு அச்சுறுத்தல் – அனந்தி

221
[poll id= “2”]

மக்களுக்கு ஒரு கருத்தை கூறிவிட்டு அரசுடன் இணக்கப்பாட்டுக்கு சென்றதன் காரணமாகநாங்கள் கட்சிக்குள் இருந்து கொண்டே விமர்சித்தவர்கள் இன்று மக்கள் மத்தியில் அவர்களது முகத்திரைகள் கிழிக்கப்பட்ட நிலையில் தாங்கள் இந்த தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற எண்ணப்பாங்கில் பலவகையான வேலைதிட்டங்களை முன்னெடுப்பதை நாங்கள் பார்க்கக்கூடியதாக உள்ளது

நேற்றைய தினம் இந்த இடத்திற்கு நான் வந்திருந்த போது ஒரு முன்னாள் போராளியாகவும் காணாமலாக்கப்பட்ட வீட்டிற்குள் சென்று பொலீசார் தாக்குதல்நடாத்தியதாகவும் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இங்கிருக்கின்ற ஒரு பாராளுமன்ற உறுப்பினரது (சிறிதரன்) வலது கையாக திகழ்கின்ற பிரதேச சபையினுடய தவிசாளருடய முரண்பாடு காரணமாக தான் தொடர்ந்தும் அச்சுறுத்தப்பட்டதாகவும் அவர் அந்த பேட்டியில் கொடுத்திருக்கின்றார்

அது எவ்வளவு மோசமான செயல் இந்த மண்ணில் பெண்கள் சாமத்தில் மிகத்துணிச்சலாக தைரியமாக நடமாடிய இந்த மண்ணில் இவ்வாறான பெண்களுக்கெதிரானவன்முறையாளர்கள் தங்களுடய அரசியல் போர்வைக்குள் நின்று பெண்களை சித்திரவதைப்படுத்துவதென்பது மிகவும் வருந்தத்தக்கது

இதை தட்டிக்கேட்க இப்பொழுது இங்கே யாரும் இல்லை தனித்து வாழும் ஒரு பெண் இங்கே நசுக்கப்படுகிறார்கள் என்றால் ஒட்டுமொத்த பெண்களும் அவர்களுக்காய்குரல்கொடுக்கவேண்டும் இது ஒரு பெண் தலைமைத்துவத்திற்கு வந்த பிரச்சினை என நினைத்து மௌனமாக இருந்தால் நாளை உங்கள் வீட்டு பெண்கள் மீதும்இவர்கள் கைவைக்கத்துணிவார்கள் எனவே கேள்வி கேட்பவர்களாக நீங்கள் இருக்கவேண்டும்.

இந்த பூமியில் பல துன்ப துயரங்களைக்கடந்து மீண்டெழ முடியாமல் இருக்கும் இவ்வாறானவர்கள் மீது ஒரு அரசியல் அங்கீகாரத்தைப்பெற்றுக்கொண்டு இவ்வாறான வன்முறைகளை ஏவப்படுகின்றன. பல வெளிவராதசம்பவங்கள் நிறைய நிகழ்ந்துள்ளது.