முன்னாள் பெண் போராளியின் வீடு உடைக்கப்பட்ட விவகாரம் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை
கிளிநொச்சி திருநகர் தெற்கில் வசித்து வரும் மூன்று மாவீரர்களின் சகோதரியும், கணவன் காணாமல் ஆக்கப்பட்ட முன்னாள் பெண் போராளி வசித்து வந்த வீடு உடைக்கப்பட்டு அவரது உடமைகள் வீதியில் வீசப்பட்டு அவரும் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிப்பட்டிருந்தார்.
இது தொடர்பில் கிளிநொச்சி பொலீஸ் நிலையத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சுமத்தியோடு, வீடு உடைப்பதற்கு வந்தவர்கள் தாம் கிளிநொச்சி பொலீஸாரின் ஒத்துழைப்புடனே உடைப்பதாகவும் தன்னிடம் தெரிவித்ததாக கூறியுள்ளார்.
எனவே இது தொடர்பில் குறித்த பெண் கடந்த திங்கள் கிழமை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கிளிநொச்சி பிராந்திய அலுவலகத்தில் முறையிட்டதற்கு அமைவாக மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய ஆணையாளர் ரி.கனகராஜ் தெரிவித்துள்ளார்.