புலிகள் மீள் உருவாக்கம்,கிளிநொச்சியில் பாரிய தேடுதல்..

48
[poll id= “2”]

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் பெரும் எடுப்பில் இராணுவத்தினர் சுற்றி வளைத்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று அதிகாலை தொடக்கம் கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் உள்ள உழவன் ஊர் கிராமத்தை அண்டிய பகுதிகளில் பெருமளவான இராணுவத்தினர், அதிரடிப்படையினர், பொலிஸார் என குவிக்கப்பட்டு அப் பிரதேங்கள் அனைத்தும் சுற்றிவளைக்கப்பட்டு கடும் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

விடுதலைபுலிகள் மீள் உருவாக்கம் தொடர்பாக கிடைக்கபெற்ற சில ரகசிய தகவல்கள் அடிப்படையிலயே இத்தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.