கிளிநொச்சி தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரான சந்தை வர்த்தகர் ஒருவர் உட்பட நால்வர் நேற்றிரவு (04) பொலிஸ்,தேர்தல் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று நள்ளிரவு குறித்த நால்வரும் மதுபோதையில் சுயேச்சைக் குழு செயற்பாட்டாளர் ஒருவரின் வீட்டுக்குக் கற்களால் எறிந்தும் வேலிகளை அடித்து உடைத்தும் பெரும் அட்டக்காசம் புரிந்துள்ளனர்.
சரமாரியான கற்கள் வீட்டுக்குள் வீசப்பட்டதனால் அச்சமடைந்த குழந்தைகள், பெண்கள் தலைக் கவசகம் அணிந்தபடி பாதுகாப்பாக வீட்டுக்குள் இருக்க, வீட்டுரிமையாளர் உடனடியாக பொலிஸ் மற்றும் தேர்தல் முறைப்பாட்டுப் பிரிவுக்கு அறிவித்துள்ளார்.