கிளிநொச்சியில் கள்ளமணல், கசிப்பு,இம் மாதம் மட்டும் 78 பேர் கைது

106

கிளிநொச்சி மாவட்டத்தில் இம்மாதம் கசிப்ப மற்றும் கள்ள மணல் நடவடிக்கைகளில் ஈடுப்பட்ட 78 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கை உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இம்மாத் முதலாம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை கசிப்பு உற்பத்தியில் ஈடுப்பட்ட 37 பேரும், கள்ளமணல் அகழ்வில் ஈடுப்பட்ட 41 பேரும் ஶ்ரீலங்கா பொலீஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன் போது 28 ரிப்பர்களும், 13 உழவு இயந்திரங்களும் பொலீஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.அண்மைக்காலமாக சட்டவிரோத மணல் அகழ்வு அதிகரித்து வந்துள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்தும் வகையில் பொலீஸார் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாருமே மணல் அள்ளவில்லை என்று அர்த்தம் கிடையாது.அரசியல் பின்புலங்களுடன் நடக்கும் மண்அகழ்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கும்.இது அங்கும் இங்கும் தனிப்பட்டவர்களால் மேற்கொள்ளப்படுபவை மட்டும் காவல்துறையினால் கைப்பற்றப்படும்.கமிசன் காசு கைக்கும் போனதும் எல்லாம் சரியாகும்.மற்றபடி மண் மீது மக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் எந்த பற்றும் இருந்ததில்லை இனியும் இருக்க போவதுமில்லை.முன்னதாக கிளிநொச்சியில் கள்ள சாராயம் குடித்து மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறார்கள்.Bar திறப்பது நல்லது என்று சிறிதரன் எம்பி அரசிடம் விண்ணப்பித்திருந்தமை குறிப்பிடதக்கது.